ஒரே வருஷத்தில் 60+ கிலோவை குறைத்த பெண் - அவரின் டயட் பிளான் என்ன தெரியுமா?

Weight Loss Journey: கடந்த ஜனவரியில் 155 கிலோவில் இருந்த பெண் ஒருவர், ஒரு வருடத்தில் 60+ கிலோவை குறைத்த தனது கதையை இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 30, 2025, 04:22 PM IST
  • அந்த பெண் இன்ஸ்டாவில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.
  • உடல் எடை குறைப்பு சார்ந்த வீடியோ பல கோடி வியூஸ்களை கடந்துள்ளது.
  • இவரின் வீடியோ பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
ஒரே வருஷத்தில் 60+ கிலோவை குறைத்த பெண் - அவரின் டயட் பிளான் என்ன தெரியுமா? title=

Weight Loss Journey: உடல் பருமன் என்பது இந்த நூற்றாண்டில் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை, குறைவான உடல் இயக்கம், மொபைல் (அ) லேப்டாப் திரைகள் முன் மணிகணக்காக அமர்ந்திருப்பது ஆகியவை அனைத்து வயதினர் இடையேயும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும், உடல் எடை அதிகமாக இருப்பது தவறு ஒன்றும் கிடையாது. மரபணு ரீதியாக கூட சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கலாம். உடல் எடையை வைத்து ஒருவரை கேலிக்கு உள்ளாக்குவது முற்றிலும் தவறாகும். உடல் எடை அதிகமாக இருந்தால் இதயம் சார்ந்த நோய்கள், நீரிழிவு நோய்கள் உள்ளிட்டவை வருவதற்கான ஆபத்துகள் அதிகமாகும். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி, உடல் எடையை குறைக்க மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்வதும் அவசியமாகும்.

Weight Loss Journey: வேகம் காட்டாதீர்கள்...

உடல் எடையை குறைப்பது எளிமையானது என்றாலும் மன உறுதி உடன் தொடர்ச்சியாக செயல்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். படிப்படியாக மெதுவாக ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதே சரியான வழிமுறையாக இருக்கும்.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் தசை வலிமை வரை... புரதம் நிறைந்த சூப்பர் பழங்கள் இவை தான்

ஒவ்வொரு நாளும் நீங்கள் மிகுந்த கவனமுடனும், நம்பிக்கையுடனும் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். அதிலும், உடல் எடையை குறைத்தவர்களின் கதைகளையும், அறிவுரைகளையும் கேட்டால் நிச்சயம் நம்மாலும் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பிக்கை ஏற்படும்.

Weight Loss Journey: உத்வேகம் கொடுக்கும் ராஜியின் கதை 

அந்த வகையில், கடந்த 2024ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 155 கிலோ உடல் எடையுடன் இருந்த ராஜி கங்காஸ் என்ற பெண், ஒரு வருடத்தில் 60+ கிலோவை குறைத்த உத்வேகமான கதையை கேட்டால் நிச்சயம் உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். இவர் உடல் எடை அதிகமாக இறுப்பதால் பலரின் கேலியின் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். அவற்றை எல்லாம் மனதில் உரமாக்கி தொடர்ச்சியாக செயலாற்றி அவர் நினைத்தபடி உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் பருமானால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த ராஜி தொடர்ச்சியான உடற்பயிற்சிகள், வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டே 12 மாதங்களில் 60+ கிலோவை குறைத்துள்ளார். அதாவது, சராசரியாக மாதத்திற்கு 5 கிலோவை ராஜி குறைத்துள்ளார். மேலும், அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் வீடியோவாகவும் எடுத்துள்ளார். அனைத்தையும் தான் செய்த அனைத்து விஷயங்களையும் பின்னணியில் அவரே விவரித்து இன்ஸ்டாவில் வீடியோவை பதிவிட்டு வந்தார். 

Weight Loss Journey: வைரலான ராஜியின் வீடியோ

இன்ஸ்டாகிராமில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. 84 ஆயிரம் பாலோயர்களை வைத்திருந்தாலும் அவரின் உடல் எடை குறைப்பு வீடியோக்கள் பல கோடி வியூஸ்களை தொட்டுவிட்டது எனலாம். அந்த வகையில், ஒரு வீடியோவில் அவருக்கு உடல் எடையை குறைக்க உதவிய உணவுப் பழக்கவழக்கம் குறித்தும் பேசியிருந்தார்.

மேலும் படிக்க | சுரைக்காய்: ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்..... பிடிக்கலைனா கூட சாப்பிடுங்க

அதிக உடல் எடையால், உடலின் ஹார்மோன் அளவில் ஏற்றஇறக்கமாக இருந்துள்ளது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையும் இருந்துள்ளது. மேலும் அவருக்கு நீரிழிவு நோய் வரும் அபாயமும் இருந்தது. இது அவரது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என முடிவெடுக்க வைத்துள்ளது. இவை அனைத்தையும் அவர் அந்த வைரல் வீடியோவிலேயே கூறியிருந்தார். 

Weight Loss Journey: ராஜியின் உணவுப் பழக்கவழக்கம் இதுதான்

ராஜி காலையில் எழுந்த உடன் வெந்தயம் மற்றும் ஓமம் போட்டு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பாராம். காலை உணவாக அவல், காய்கறிகள், தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம். இடைஇடையே சியா விதைகள் ஊறவைத்த தண்ணீரை மட்டுமே குடிப்பாராம்.

இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸை மதிய உணவாக எடுத்துக்கொள்கிறார். மேலும், மாலையில் கிரீன் டீ மற்றும் சோளத்தை சாப்பிடுவாராம். இரவு உணவாக காய்கறிகள் வைத்து கிரீல் செய்யப்பட்ட பிரெட்டை சாப்பிடுவாராம். இரவு உணவுக்கு பின் தூங்கச் செல்லும் முன்னர் வெந்தயம் மற்றும் ஓமம் போட்டு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பாராம். இதுதான் அவரது உணவுப்பழக்கவழக்கமாக இருந்துள்ளது. 

மேலும் படிக்க | இரவு உணவில் இந்த தவறுகளை செய்யாதீங்க... அது உடல்நிலையை வச்சு செஞ்சுரும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News