Home Remedies for Sinus: சைனஸ் நோய் இந்த காலகட்டத்தில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. அவ்வப்போது மாற்றம் காணும் வானிலை மற்றும் மாசுபாடு காரணமாக இது இந்நாட்களில் மக்களை அதிகமாக பிரச்சனைக்குள்ளாக்குகிறது. உங்களுக்கும் சைனஸ் பிரச்சனை உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உதவியாக இருக்கும்.
சைனஸ் பிரச்சனை
சைனஸ் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். சைனஸ் நோய் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தொற்று நோயாகும். இதன் வீரியம் குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. இதில், மூக்கு மற்றும் தலையைச் சுற்றி வலி உணரப்படுகிறது.
சைனஸ் தொற்று மனித உடலில் 1 முதல் 8 வாரங்கள் வரை இருக்கக்கூடும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால், இதனால் அதிக அவதிக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். சைனஸின் அறிகுறிகளைப் புறக்கணிப்பது சரியானதல்ல. சைனஸ் பிரச்சனையின் சில ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி இங்கே காணலாம். சில எளிய தீர்வுகள் மூலம் இவற்றை இயற்கையான வழியில் சரி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Symptoms of Sinus: சைனஸ் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்
- மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
- தலை மற்றும் முகத்தில் வலி
- குறிப்பாக மூக்குப் பகுதிகளில் அதிக வலி.
- தொண்டை வலி
- இருமல்.
- சோர்வான, பலவீனமான உணர்வு
- வாசனை மற்றும் சுவை உணரும் திறன் குறைவது
சைனஸ் பிரச்சனைக்கான வீட்டு வைத்தியங்கள்:
சூடான நீரில் ஆவி பிடிப்பது
சைனஸ் பிரச்சனைகளுக்கு வெந்நீரில் ஆவி பிடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து, அந்த நீராவிக்கு நேராக முகத்தை வைத்து ஆவி பிடிக்க வேண்டும். இது சைனஸில் சிக்கியுள்ள சளியை அகற்றி, நாசிப் பாதைகளைத் திறக்க உதவும்.
மூக்கில் உப்புத் தண்ணீரை ஊற்றுதல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பைக் கலந்து அதில் சில சொட்டுகளை மூக்கில் ஊற்றுவது மூக்குத் துவாரங்களில் சிக்கியுள்ள சளியை அகற்ற உதவுகிறது.
வெதுவெதுப்பான நீரில் மஞ்சள்
ஒரு ஸ்பூன் மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் சைனஸ் வீக்கம் குறைவதோடு சளி பிரச்சனையும் நீங்கும்.
துளசி இலைகள்
துளசி இலைகளை உலர்த்தி, அரைத்து, தேநீரில் கலந்து குடித்தால், சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மூக்கில் துளசி எண்ணெயை வைப்பதும் மூக்குத் துவாரங்களை சுத்தம் செய்யும்.
லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா
சைனஸ் பிரச்சனைகளுக்கு லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதும் நன்மை பயக்கும். யோகாசனங்களும் பிராணயாமமும் சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளித்து, மூக்குத் துவாரங்களைத் திறக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்பார்வை கூர்மையாக... பீட்டா கரோட்டீன் நிறைந்த சில சூப்பர் உணவுகள்
மேலும் படிக்க | சுரைக்காய்: ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்..... பிடிக்கலைனா கூட சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ