Kudumbasthan Hero First Choice : சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தில் ஹீரோவாக மணிகண்டனுக்கு முன்னர் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர்.
Kudumbasthan Hero First Choice : தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர், மணிகண்டன். இவர் நடித்திருக்கும் குடும்பஸ்தன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இதில் அவருக்கு முன்னர் ஹீரோவாக நடிக்க வைக்க வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருந்தாராம். அவரே மணிகண்டனுக்கு போன் போட்டு நீங்களே இந்த படத்தை பண்ணிடுங்க எனக்கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம், குடும்பஸ்தன். இந்த படத்தில், மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இந்த படம், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வே மேக்னா என்பவர் நடித்திருந்தார்.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர், கடன் வாங்கி குடும்பத்தை ஓட்டுகிறார். அதனை காமெடியாக சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி.
குடும்பஸ்தன் படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மணிகண்டன் அல்ல. வேறு யார் தெரியுமா?
அசோக் செல்வன்தான் அந்த ஹீரோ. இந்த படத்தில் நடிக்க அவரைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கின்றனர். ஆனால், அவர் மணிகண்டனிடம் “என் கிட்ட டேட் இல்ல..நீங்களே இந்த படம் பண்ணுங்க..” என போனில் பேசியிருக்கிறார்.
இவரது ‘எமது தொழில் ரொமான்ஸ்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம், மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. எனவே, இப்படியொரு வாய்ப்பை அசோக் தவறவிட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
குடும்பஸ்தன் படம் 8 நாட்களில் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.