Saturn Sun conjunction: மாசி மாத பிறப்பில், சூரிய பெயர்ச்சியின் போது ஏற்படும் கும்ப ராசியில் ஏற்படும் சனி சூரிய பகவான் சேர்க்கை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, நிம்மதி, சந்தோஷம் என அனைத்தும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
கிரகங்களின் ராஜாவான சூரியன், இன்னும் சில நாட்களில் தனது ராசியை மாற்றிக் கொள்வார். மகர ராசியில் இருந்து விலகி, கும்ப ராசியில் நுழையும் போது, கர்மவினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனியுடன் சூரியனின் சேர்க்கை இருக்கும்.
நன்மையையும் மங்களத்தையும் கொடுக்கும் கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. வாழ்வில் ஒளி கொடுக்கும் சூரியன், நீதிக் கடவுளான சனி இணைவதன் காரணமாக ஏற்படும் இணைவு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
சனி பகவானுக்கும், சூரியனுக்கும் இடையே பகை உணர்வு இருந்தாலும், இரண்டு கிரகங்களுக்கு இடையே ஏற்படும் இணைவினால், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
கும்ப ராசியில் சூரியன்: பிப்ரவரி 12 புதன்கிழமை அன்று சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனி ஏற்கனவே கும்ப ராசியில் இருப்பதால் இரண்டு கிரகங்களுக்கு இடையே ஒரு இணைப்பு உருவாகும்.
பிப்ரவரி 12-ம் தேதி சூரியப் பெயர்ச்சி காரணமாக மாசி மாதத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் ஜாக்பாட் பலன்களைப் பெற்று ஜொலிக்கப் போகிறார்கள் என்பதையும், யாருக்கு பொன்னான நாட்கள் தொடங்க உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி பலன் தரும். மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வேலையில் பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கலாம். செல்வம் பெருக வாய்ப்பு உண்டு.
சிம்மத்தை ஆளும் கிரகம் சூரியன். இந்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசிக்குள் நுழைவது நன்மை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில், தொழிலில் முன்னேற்றம் அடையலாம். உங்கள் மனதில் வித்தியாசமான உற்சாகம் இருக்கும், அது உங்களுக்கு வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடும்.
கும்ப ராசியில் தான் இரு கிரகங்களின் சேர்க்கை நடைபெறுகிறது, இந்நிலையில், கும்ப ராசிக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். செல்வம் பெருக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.