சுகாதாரத் துறை பட்ஜெட் 2025: இந்த ஆண்டு பட்ஜெட் குறித்து சுகாதாரத் துறையில் நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. சுகாதார துறைக்கான அரசாங்க ஒதுக்கீடுகளை அதிகரிப்பது குறித்து பரவலாக பேசப்பட்டது, மேலும் பல முக்கியமான விஷயங்கள் வரி சீர்திருத்தத்தின் பலனைப் பெறும் எனவும் கூறப்பட்டது. மக்களின் மருத்துவ வசதிகள் அதிகரிப்பது பற்றி பேசப்பட்டது. இது தவிர, மருத்துவக் கல்வியின் தேவையை நிறைவேற்றுவதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கிடைத்தவை
பல மருந்துகள் மலிவாக இருக்கும்
36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் நோயாளி உதவித் திட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட 37 மருந்துகள் மற்றும் 13 புதிய நோயாளி உதவி திட்டங்கள் அடிப்படை சுங்க வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். இருப்பினும், 6 உயிர்காக்கும் மருந்துகள் பட்டியலில் 5% சலுகை சுங்க வரியுடன் சேர்க்கப்பட உள்ளன.
மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிகரிக்கும்
மருத்துவக் கல்வியில் கவனம் செலுத்தி, மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு, அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தவிர அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும். இந்த மருத்துவ படிப்பு படிக்க தயாராகும் மாணவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள்.
மருத்துவ கருவிகள் விலை குறையும்
பல மருத்துவக் கருவிகளின் விலையைக் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளதால், சிகிச்சைச் செலவு குறையும், இதனால் நோயாளிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.
ஹெல்த்கேர் சென்டரில் பிராட்பேண்ட்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பகல்நேரப் புற்றுநோய் மையம்
எதிர்வரும் 3 ஆண்டுகளில் ஏழை எளியவர்கள் பலன் அடையும் வகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பகல்நேர புற்றுநோய் மையங்களை திறக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 200 மையங்களை திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை பெற முடியாத பல ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
அரசாங்கம் GST விகிதங்களைக் குறைத்ததோடு 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு - Trastuzumab, Osimertinib மற்றும் Durvalumab ஆகியவை சுங்க வரியிலிருந்து விலக்கு அளித்தது.
தி லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில், 2019 ஆம் ஆண்டில் தோராயமாக 12 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புற்றுநோயால், 9.3 லட்சம் பேர் இறந்துள்ளனர் ஆசியாவில் இந்தியா, புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. புற்றூநோயாளிகள் எண்ணிக்கை 2020ம்ஆண்டில் 13.9 லட்சமாக இருந்த நிலையில், பின்னர் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் முறையே 14.2 லட்சமாகவும் 14.6 லட்சமாக அதிகரித்தது.
மருத்துவ சுற்றுலா முன்னேற்றம் பெறும்
கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவச் செலவு மிகவும் மலிவானது என்பதால், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை அளிக்கிறது. மருத்துவ சுற்றுலாவை மேலும் மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ