Union Budget 2025: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சம் ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு உயர்வு அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெறும் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. 1மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி செலுத்துதலை எளிமையாக்கும் விதமாக புதிய மசோதா இருக்கும். முன்னதாக, வருமான வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக இருந்த நிலையில், இப்போது மிக பெரிய அளவில் உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி முறையின் கீழ் ரூ.12 லட்சம் வரை - நிலையான விலக்குகள் உட்பட ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை மத்திய பட்ஜெட் 2025 ஐ வாசித்தபோது தெரிவித்தார்.
ரூ.12 லட்சத்திற்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கான வரி அடுக்கு விபரம்
திருத்தப்பட்ட வரி அடுக்கின் கீழ், ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானத்திற்கு வரி 10 சதவீதமாக இருக்கும்.
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை அது 15 சதவீதமாக இருக்கும்.
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அது 20 சதவீதமாக இருக்கும்.
ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சத்திற்கு இடையில் இது 25 சதவீதமாக இருக்கும்.
ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சத்திற்கு மேல் இது 30 சதவீதமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ