Budget 2025: பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு மட்டும் இவ்வளவு அறிவிப்புகளா?

Budget announcements for Bihar: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் பீகார் மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2025, 12:45 PM IST
  • பட்ஜெட்டில் பீகாருக்கு சிறப்பு சலுகைகள்.
  • இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
  • மக்கானா வாரியம் அமைக்கப்பட உள்ளது.
Budget 2025: பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு மட்டும் இவ்வளவு அறிவிப்புகளா? title=

Budget announcements for Bihar: 2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிகமான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல நிறைய திட்டங்கள் பீகாருக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம், புதிய தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐஐடி விரிவாக்கம் என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மேலும் பீகாரைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசளித்த வெள்ளை நிற கைத்தறி பட்டுப் புடவை அணிந்து வந்து இருந்தார் நிர்மலா சீதாராமன்.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய அரசிடம் பீகார் கோரிக்கை

மத்திய பட்ஜெட்டுக்கு முன் பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி நிர்மலா சீதாராமனிடம் 32 பக்க கோரிக்கைகளை சமர்ப்பித்தார். அதில் தர்பங்கா விமான நிலையம் மேம்படுத்துதல், ராஜ்கிர் மற்றும் பாகல்பூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், வடக்கு பீகாரில் வெள்ள மேலாண்மை அமைக்கப்பட வேண்டும், 10 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும், மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் தளர்வு போன்ற கோரிக்கைகளை வைத்து இருந்தார்.

பட்ஜெட்டில் பீகாருக்கு வெளியான அறிவிப்புகள்

  • பட்ஜெட்டில் பீகார் விவசாயிகளுக்காக மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பீகாரின் மக்கானா விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வாரியத்தின் மூலம் மக்கானா விவசாயிகளுக்கு பயிற்சியளித்து, விவசாயிகள் அரசாங்க திட்டங்களை எப்படி அணுகுவது போன்றவற்றிக்கு உதவும்.
  • பீகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் நிறுவப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டல் மற்றும் திறன் அதிகரிக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும்.
  • பீகாரில் உள்ள பாட்னா விமான நிலையத்தின் திறன் அதிகரிக்கப்படும். மேலும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம், பிஹ்தாவில் பிரவுன்ஃபீல்ட் விமான நிலையம் போன்றவை விரிவாக்கம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • பீகாரில் உள்ள மிதிலாஞ்சல் பகுதியில் 50,000 ஹெக்டேர் பயனடையும் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
  • பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும், அதிக மாணவர்கள் சேர இது வழிவகுக்கும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க |  மத்திய பட்ஜெட் 2025: கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய சிறப்பம்சங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News