உடல் எடை மடமடன்னு குறைய..பிளாக் காஃபியுடன் ‘இதையும்’ சேர்த்து சாப்பிடுங்க!

Foods With Black Coffee : நம்மில் பலர், எடையை குறைக்க பிளாக் காஃபியை குடிப்பதுண்டு. இதனுடன் சேர்த்து சில பொருட்களை சாப்பிட்டால் எடை மடமடவென குறையுமாம். இது குறித்து இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 31, 2025, 07:42 PM IST
  • பிளாக் காஃபியுடன் சேர்த்து சாப்பிட வேண்டியவை..
  • எடை மடமடவென குறையும்..
  • எந்தெந்த உணவுகள் தெரியுமா?
உடல் எடை மடமடன்னு குறைய..பிளாக் காஃபியுடன் ‘இதையும்’ சேர்த்து சாப்பிடுங்க! title=

Foods With Black Coffee : உடல் எடையை குறைப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்காக என்ன உடற்பயிற்சி செய்தாலும் அதற்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளும்-டயட்டும் பெரும் பங்காற்றுகின்றன. உடல் எடையை குறைக்க நினைக்கும் சிலர், தங்களது முயற்சியில் அவர்கள் பிளாக் காபியை தவறாமல் இணைத்துக் கொள்வது உண்டு. இதில் சிலர் சர்க்கரை கலந்து குடிப்பர், சிலர் இனிப்பு கலக்காமல் குடிப்பர். இந்த பிளாக் காபி குடிப்பதால் கண்டிப்பாக உடல் எடை குறையும் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து குடித்தால் மடமடவென எடை குறையுமாம். அப்படி சேர்க்க வேண்டிய ஐந்து பொருட்கள் கொடுத்து இங்கு பார்ப்போம்.

அவகேடோ:

அவகேடோ பழத்தை, பட்டர் ஃப்ரூட் என பேச்சு வழக்கில் கூறுவது உண்டு. இதனை ஜூஸ் ஆகவும் சிலர் செய்து குடிப்பர். சிலர் பிரட் ரோஸ்ட் சாப்பிடும்போது அதனுடன் சேர்த்து இந்த பழத்தையும் சாண்ட்விச் ஆக வைத்து சாப்பிடுவது உண்டு. இதனை பிளாக் காபியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஆற்றல் அதிகரித்து மெட்டபாலிச சக்தியும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, அவகேடோ பழத்தில் இருக்கும் ஹிந்தி fats மட்டும் கஃபைன் காலை உணவிற்கு பின்வரும் பசியை தடுக்க உதவுமாம். இதனால் உடல் எடையும் சீக்கிரம் அதிகரிக்காது.

முட்டை: 

உடல் எடையை குறைப்பவர்கள் தங்களது டயட்டில் தவிர்க்காமல் சேர்த்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்று முட்டை. இதனை காலை வர்க்-அவுட்டுக்கு பின்னர் சிலர் அவித்து சாப்பிடுவர். ஒரு சிலர் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு வெள்ளை கருவை சாப்பிடுவது வழக்கம். இதை பிளாக் காபி சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டால் நமக்கு கவனிச்சிதறல் ஏற்படாமல் இருக்குமாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் சாப்பிட்டால் எனர்ஜியுடன் அந்த உடற்பயிற்சியை முடிக்க முடியும். இது பல மணி நேரத்திற்கு நமது வயிறை ஃபுல்லாக வைத்து பசியுணர்வு ஏற்படாமல் தடுக்கிறது.

கிரேக்க தயிர்: 

கிரேக்க தயிர் நமது வயிறை முழுமையாக உணர வைக்கும் பசியை போக்கும் புரதச்சத்து நிறைந்த உணவாகும். உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், இதனை தங்களது உணவை சேர்த்துக் கொள்வது உண்டு. இதை பலர் பெரும்பாலானோர் காலை உணவாக எடுத்துக் கொள்வர். சிறந்த காலை உணவாகவும் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் இதுவு விளங்குகிறது. இதனுடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு புரதச்சத்து அதிகரிப்பதுடன், சரியான உணவாகவும் இருக்கும்.

நட்ஸ் மறறும் விதைகள்: 

பிளாக் காபியுடன் உலர் பழங்கள் அல்லது நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளித்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உதவுமாம். கை நிறைய பாதாம் அல்லது பிஸ்தா உள்ளிட்ட நட்சை, பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது அந்த நாள் முழுவதும் தேவையற்ற பசி உணர்வு ஏற்படாமல் தடுக்கும்.

பெர்ரி பழங்கள்:

பிளாக் காபியுடன் பெரிய பழங்கள் சேர்த்து சாப்பிடுவது உடலில் கொழுப்பு கரையவும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் உதவும் என கூறப்படுகிறது. இதனால் உங்கள் காலையையும் சுவையுடன் தொடங்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

மேலும் படிக்க | பிளாக் காபியின் 6 ஆரோக்கிய நன்மைகள் - காலையில் அதை ஏன் சாப்பிடுவது நல்லது?

மேலும் படிக்க | காலையில் பிளாக் காபி குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News