Union Budget 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல வித முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். வரி விதிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். தற்போதுள்ள வரி கட்டமைப்பை மாற்றியமைப்பதும், வரி செலுத்துவோருக்கு இணக்கத்தை எளிதாக்குவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த வாரம் புதிய வருமான வரி திட்டம் மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார். நிதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதில் அரசாங்கம் காட்டும் முனைப்பின் ஒரு பகுதியாக 60 ஆண்டு காலமாக இருந்து வரும் வருமான வரி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வருமானவரி சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ