UPI Payments New Update: யூபிஐ (UPI) பயன்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூபிஐ பேமண்ட் குறித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்ஸ் ஆப் இந்தியா (National Payments Corporation of India) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதுக்குறித்து முழுத்தகவளையும் பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட்டில் யூபிஐ பங்கு மற்றும் 83% ஆக அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இது 34% ஆக இருந்தது. யூபிஐ பயன்பாடு வெறும் ஐந்தே வருடங்களில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆர்டிஜிஎஸ் நெப்ட் (RTGS Neft), ஐஎம்பிஎஸ் (IMPS), கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் உள்ளிட்ட டிஜிட்டல் பேமெண்ட்களின் பயன்பாடு 17% என ஒரே அடியாக அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
கடந்த 2018ல் யூபிஐ பண பரிமாற்றம் 3,75 கோடியாக இருந்த நிலையில், 2024 இல் அது 17,221 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி யூபிஐ பண பரிவர்த்ததையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.586 லட்சம் கோடியிலிருந்து ரூ.24683 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து யூபிஐ பயன்பாட்டில் முக்கிய விதி ஒன்று அமல்படுத்துவதாக என்பிசிஐ (NPCI) எனப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்ஸ் ஆப் இந்தியா (National Payments Corporation of India) அறிவித்துள்ளது.
அதன்படி இனி யூபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்களை பயன்படுத்துவதை தடை செய்து எண்ணெழுத்து எழுத்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
அதாவது எண்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலும், ஆங்கில எழுத்துக்களில் A முதல் Z வரையிலும் பயன்படுத்தலாம். அதேநேரம் ஸ்பெஷல் கேரக்டர்களை பயன்படுத்தக்கூடாது. இவற்றை செயல்படுத்தாத யூபிஐ ஐடிகளின் பண பரிவர்த்தனைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தானாகவே என்பிசிஐ அமைப்பால் நிராகரிக்கப்படும்.
முன்னதாக ஜனவரி ஒன்பதாம் தேதியே என்பிசிஐ (NPCI) இது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட வங்கிகளும் பேமெண்ட் பிளாட்பார்ம்கள் எனப்படும் கட்டண தளங்களும் உடனடியாக அமல்படுத்தி விட்டன. இன்னும் இதை அமல்படுத்தாமல் இருக்கும் தனி நபர்களுக்கான என்பிசிஐ (NPCI) மீண்டும் ஒருமுறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல யூபிஐ பயன்படுத்துபவர்கள் ஜம்ப் டெபாசிட் ஸ்கேம் என்னும் மோசடி வலையில் சிக்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் மோசடிக்காரர்கள், தெரியாமல் உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டதாக கூறி ஒரு சிறிய தொகை அனுப்பி அதை திருப்பி அனுப்புமாறு கேட்கின்றனர். இதை நம்பி பயணர்கள் பணத்தினை திரும்ப அனுப்பும்போது, அவர்களின் கணக்கிலிருந்து பெரும் தொகை மோசடிக்காரர்களுக்கு சென்று விடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து என்பிசிஐ (NPCI), யூபிஐ தளத்தில் இது போன்ற மோசடிகள் நடப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆனாலும் இதுபோல உங்களது யூபிஐ அக்கவுண்டில் பணம் எதுவும் வரவு வைக்கப்பட்டால் அந்த பணத்தினை திரும்ப அளிக்க முயற்சிக்க வேண்டாம். யூபிஐ அக்கவுண்டினை பொறுத்தவரை உங்களது பின் எண்ணை பதிவிடாமல் மோசடியாளர்கள் பணத்தினை திருட முடியாது. பொதுவாக மோசடிகளில் சிக்காமல் இருக்க பயணர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் யூபிஐ ஆப்பினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் இந்த ஆப்பினை google பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டவுன்லோட் செய்வதே சிறந்தது.
மூன்றாம் தரப்பு செயலியில் இருந்து யூபிஐ ஆப்பினை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது மோசடி சிக்கல்களுக்கு நாமே பாதை அமைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். எனவே மேற்கண்ட விஷயங்களை தவறாது பின்பற்றி உங்களது பணத்தினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க - அடிக்கடி UPI பயன்படுத்துபவரா நீங்கள்? ஜனவரி 1 முதல் விதிகளில் மாற்றம்!
மேலும் படிக்க - QR குறியீடு மோசடி.. தவிர்ப்பது எப்படி? பணம் செலுத்தும்போது கவனமாக இருங்கள்!
மேலும் படிக்க - RBI அப்டேட்: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி, இனி இந்த வசதியும் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ