Budget 2025: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் முக்கிய EPFO அறிவிப்பு

Union Budget 2025: மாத சன்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள், குறிப்பாக ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்பான பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2025, 11:47 AM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இதற்கு முன் எப்போது ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது?
  • தற்போதுள்ள குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் என்ன?
  • பட்ஜெட்டில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
Budget 2025: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் முக்கிய EPFO அறிவிப்பு title=

Union Budget 2025: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்கள். பலவகைப்பட்ட மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சம்பள வர்க்க மக்கள், அரசு ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள் என இவர்கள் நிதி அமைச்சரிடம் அதிக நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

மாத சன்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள், குறிப்பாக ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்பான எதிர்பார்ப்புகள் உள்ளன. முதன்மையானதாக, ஊழியர் ஓய்வூதிய அமைப்பு (Employee Pension Scheme) மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது.

Pensioners: ஓய்வூதியதாரர்களின் நீண்டகால நம்பிக்கை

பல ஆண்டுகளாக, ஓய்வூதியதாரர்களும் ஊழியர்களுக்கான குழுக்களும் EPFO ​​இன் கீழ் தற்போதுள்ள இபிஎஸ் ஓய்வூதியத்தை (EPF Pension) அதிகரிக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மாதத்திற்கு 1,000 ரூபாயாக இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்தத் தொகை தங்களுக்கான செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என்பதை மூத்த குடிமக்கள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். தங்கள் பணி வாழ்க்கையில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நிதிக்கு பங்களித்த பிறகு, இவ்வளவு குறைவான ஓய்வூதியம் கிடைப்பது சரியல்ல என்பது அவர்களது வாதமாக உள்ளது. 

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

இந்த பட்ஜெட்டில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகின்றது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை மாதத்திற்கு 7,500 ரூபாயாக அதிகரித்து அறிவிப்பார் என எண்ணற்ற ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்த மாற்றம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிசமான முன்னேற்றமாக மாறக்கூடும். வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிகரிப்பு அவர்கள் தங்கள் செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் பங்களிப்பு

இபிஎஃப் உறுப்பினர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிப்பை அளிக்கின்றனர். ஆனால், தற்போதைய ஓய்வூதியத் தொகை தொழிலாளர்களின் பல ஆண்டு உழைப்பையும் பங்களிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. அரசாங்கம் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இருக்கும்.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இதற்கு முன் எப்போது ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது?

இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில், அரசு இபிஎஸ் ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தது. அப்போது மாத ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வூதியத்தில் திருத்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இந்த 10 ஆண்டுகளில் விலைவாசி, வாழ்க்கைத்தரம், பணவீக்கம் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ரூ.1,000 என்ற மாத ஓய்வூதியம் மிகக்குறைவானது. ஆகையால், இதை மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள்.

பட்ஜெட்டில் ஓய்வூதிய அளவு ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டால், அது இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு (EPF Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இது அவர்களது பணி ஓய்வு காலத்திற்கு நிதி பாதுகாப்பையும் அளிக்கும். இந்த நடவடிக்கை, தனியார் ஊழியர்கள் மீது அரசு கொண்டுள்ள பொறுப்பையும் எடுத்துக்காட்டும்.

மேலும் படிக்க | Budget 2025: புதிய வரி முறையில் வரி விலக்குகள்... நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்?

மேலும் படிக்க | Budget 2025: மூத்த குடிமக்களுக்கு வரி விலக்குகள், வட்டி விகிதத்தில் குட் நியூஸ் காத்திருக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News