உத்திர பிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடக்கும் மகாகும்பமேளவிற்கு, நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரயாக்ராஜ் செல்ல பல்வேறு இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்படும் நிலையில், விமானக் கட்டணம், மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் யாத்ரீகர்களுக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசாங்கம் விமான நிறுவனங்களிடம் கட்ட்ணத்தை குறைக்குமாறு அறிவுறுத்தியது. மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கியதை அடுத்து, முக்கிய வழித்தடங்களில் புதன்கிழமை பிரயாக்ராஜ் வழித்தடத்தில் விமானக் கட்டணங்கள் 30-50 சதவீதம் சரி செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) கடந்த சில நாட்களாக விமான நிறுவனங்களுடன் பிரயாக்ராஜ் வழித்தடத்தில் விண்ணை முட்டும் வகையில் அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் குறித்து பல சுற்று மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. மேலும் அதிக விமான சேவைகளை இயக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தியது.,
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மஹாகும்ப மஹோத்சவத்தின் போது நியாயமான கட்டணங்களை உறுதி செய்யும் அதே வேளையில், நாடு முழுவதும் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜுக்கு விமான இணைப்பின் போதுமான தன்மையை மதிப்பாய்வு செய்ய விமான நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
"ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதை உறுதிபடுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன," என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டார்.
மகா கும்பமேளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பிறகு பிரயாக்ராஜுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறையக் கூடும் என்று அஞ்சுவதாலும் விமான நிறுவனங்கள், விமானக் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரி 4 ஆம் தேதி வரை டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையிலிருந்து பிரயாக்ராஜுக்குச் செல்லும் விமானங்களுக்கான சராசரி ஸ்பாட் கட்டணங்கள் ₹13,000-30,000 வரை இருந்தன என ixigo போர்ட்டல் தரவுகள் கூறுகின்றன . இந்த வழித்தடங்களில் சிலவற்றின் டிக்கெட் கட்டணங்கள் ₹45,000 என்ற அளவை கூட தாண்டியிருந்தன.
மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, விமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய கூடுதல் விமான சேவைகள் காரணமாகவும், கட்டணங்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை முதல் கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண நிறுவனங்கள் தெரிவித்தன.
தற்போது, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாசா மற்றும் அலையன்ஸ் ஏர் ஆகியவை பிரயாக்ராஜுக்கு விமானங்களை இயக்குகின்றன. கட்டண குறைப்பு குறித்து, இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜுக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் விமான நிறுவனம் 30-50 சதவீதம் கட்டணங்களைக் குறைத்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜுக்கு சுமார் 80,000 மாதாந்திர இருக்கைகளுடன் வாரத்திற்கு 132 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
2024 டிசம்பரில் எட்டு நகரங்களுடன் விமானங்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்த பிரயாக்ராஜ் தற்போது 17 நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அதன் விமான வழித்தட இணைப்பு மொத்தம் 26 நகரங்களுக்கு அதிகரித்துள்ளது.
மகாகும்பமேளாவின் போது, பிரயாக்ராஜ் விமான நிலையம் 30,172 பயணிகளின் வருகையைக் கண்டதாகவும், ஒரு வாரத்தில் 226 விமானங்களை இயக்கியதாகவும், முதல் முறையாக ஒரே நாளில் 5,000 பயணிகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டியதாகவும் MoCA குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ