Tamil Nadu Auto Charges Hike Latest News Updates: கடந்த 2013ஆம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதை திருத்தி அமைக்க வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உயர்த்தப்பட்ட ஆட்டோ கட்டணம்...?
இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே, ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் உயர்த்திய பின்னர், ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் 1.8 கி.மீட்டருக்கு ரூ.50 ஆக உள்ளது. கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.18 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்டோ கட்டண உயர்வு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனே உள்ளே புகுந்த அரசு
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்று போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று (ஜன. 30) போக்குவரத்துறை சார்பில் தெரிவித்த தகவலில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணம் உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மக்கள் நீதி மய்யத்தில் திடீர் விலகல்... நடிகை வினோதினி அறிவிப்பு - கமல்ஹாசன் காரணமா?
மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டடார போக்குவரத்து அலுலவர்களிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் நாளை (ஜன. 31) வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதனை தெரிவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டில்தான் ஆட்டோ கட்டணம் தமிழ்நாடு அரசால் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது 1.8 கி.மீ., தொலைவுக்கு ரூ.25 மற்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீ., 12 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடங்களுக்கு ரூ.3.50 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததாலேயே, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு தள்ளப்பட்டது.
2013ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி கணக்கின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 66.85 ரூபாயாக இருந்தது. டீசல் விலை 53.53 ரூபாயாக இருந்தது. எல்பிஜி சிலிண்டர் விலை 2013ஆம் ஆண்டு ஜனவரியில் 410 ரூபாயாக உள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல் 100.90 ரூபாயாகவும், டீசல் 92.49 ரூபாயாகவும், எல்பிஜி சிலிண்டர் 818.50 ரூபாயாகவும் மாறிவிட்டது. அதாவது கடந்த 12 ஆண்டுகளில் இதன் அனைத்து விலையும் ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும் சூழலில் ஆட்டோ கட்டணம் மட்டும் உயர்த்தப்படலாம் இருப்பது வேதனை அளிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, ஓலா, ரேபிடோ போன்ற பைக் டாக்ஸிகளால் தங்களின் நிலை மிகவும் மோசமாகிவிட்டதாக கண்ணீர் விடும் ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டணத்தை மாற்றியமைக்காமல் அரசு காலம் தாழ்த்துவதாலும் மனமுடைந்துள்ளனர். எனவே அரசு உடனடியாக ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் படிக்க | ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது..! பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ