தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்; பிற மாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
திருவேற்காடு அருகே அரசுப் பேருந்து தளத்தில் உள்ள பலகை உடைந்ததால், ஒரு பெண் விழுந்து கீழே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் இல்லாத நிலை இருப்பதால், தீர்வு கிடைப்பது சந்தேகம் தான் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் ஓட்டுநர் உரிமங்கள் (DL) மற்றும் கற்பவரின் உரிமங்களை (LL) மறுதொடக்கம் செய்ய கர்நாடக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு, காலாண்டு வரியினை செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (29.1.2020) தலைமைச் செயலகத்தில், உள் (போக்குவரத்து) துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.