கல்லீரல் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். தினசரி உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும். கல்லீரல் நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் நமது உடல்கள் உற்பத்தி செய்யும் நச்சுகளை அகற்றவும் கல்லீரல் உதவுகிறது.
கல்லீரல் நமது இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால் அது நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம்.
அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் கல்லீரலை பாதிக்கலாம். மேலும் நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பதும் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவை அனைத்தும் கல்லீரலை வேலை செய்யாமல் போகலாம். அதனால்தான் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.
புகை மற்றும் மது பழக்கம் உள்ளவர்கள் கல்லீரலை சுத்தம் செய்ய தண்ணீர், எலுமிச்சை, வெள்ளரி, புதினா ஆகியவற்றை ஜூஸ் செய்து அந்த தண்ணீரில் எலுமிச்சையை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டி தினசரி குடிக்கவும்.
காலை முதல் மாலை வரை இந்த ஜூஸை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கல்லீரலை சுத்தப்படுத்தலாம்.
ஆனால் யாருக்காவது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுத்தாலோ மருத்துவர் அறிவுரை இல்லாமல் இதனை செய்ய வேண்டாம்.