Income Tax Calculator: ரூ.15 லட்சம் வருட வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரி முறை சிறந்தது?

Old Tax Regime Vs New Tax Regime: ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர்கள், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.48,100 வரை வரிச் சேமிப்புகளைப் பெறலாம். முழுமையான கணக்கீடுகள் இதோ.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2025, 12:35 PM IST
  • ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரிகளையும் செலுத்த வேண்டாம்.
  • பழைய வரி முறையின் கீழ் வருமான வரி கணக்கீடு.
  • பழைய வரி முறை சில வருமான பிரிவுகளுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Income Tax Calculator: ரூ.15 லட்சம் வருட வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரி முறை சிறந்தது? title=

Income Tax Calculator: பிப்ரவரி 1, 2025 அன்று மத்திய பட்ஜெட் புதிய வரி ஆட்சி அடுக்குகளை மாற்றியமைத்ததிலிருந்து, ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள் பழைய வரி முறையை ஏற்றுக் கொள்வதா அல்லது புதிய வரி முறைக்கு மாறுவதா என்று திவிரமாக யோசித்து வருகின்றனர். புதிய வரி முறையில் வரி வரம்புகள் மற்றும் தள்ளுபடி சலுகைககள் தொடர்பான பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு, இப்போது ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரிகளையும் செலுத்த மாட்டார்கள்.

பழைய வரி முறையில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவுகளுக்கு உட்பட்ட தனிநபர்களுக்கு வரிக்கு உட்பட்ட வருமானத்தை கணிசமாகக் குறைக்கக்கூடிய ஏராளமான வருமான வரி விலக்குகள் உள்ளன. இதனை முழுமையாக பயன்படுத்த முடிந்தால், பழைய வரி முறை சில வருமான பிரிவுகளுக்கு, குறிப்பாக தங்கள் முதலீடுகளை திறம்பட திட்டமிட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பழைய வரி முறையின் கீழ் நன்மைகளை அதிகரிக்க, வரி செலுத்துவோர் பல்வேறு விலக்குகளைப் பெறுவதற்கு உதவும் ஒரு சரியான முதலீட்டு உத்தியைக் கொண்டிருக்க வேண்டும். 

பழைய வரி முறையின் கீழ் வருமான வரி கணக்கீடு (சம்பளம் ரூ. 15 லட்சம்)

பழைய வரி முறையின் கீழ் வரி அடுக்குகள்:

ரூ. 0 – 2.5 லட்சம்: 0%

ரூ. 2.5 லட்சம் – ரூ.5 லட்சம்: 5%

ரூ. 5 லட்சம் – ரூ.10 லட்சம்: 20%

ரூ. 10 லட்சத்திற்கு மேல்: 30%

கழிவுகள் மற்றும் விலக்குகள் (பழைய வரி முறை)

நிலையான விலக்கு: ரூ. 50,000

பிரிவு 80C (அதிகபட்சம்): ரூ. 1,50,000

பிரிவு 80D (அதிகபட்சம்): ரூ. 75,000

வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24B): ரூ. 2,00,000

கூடுதல் NPS விலக்கு (80CCD(1B)): ரூ. 50,000

மொத்த விலக்குகள்: ரூ. 5.25 லட்சம்

HRA விலக்கு: ரூ. 3 லட்சம் ( மாதத்திற்கு ரூ.25,000 HRA கொடுப்பனவு கொண்ட  ரூ.50,000 அடிப்படை சம்பளமாகப் பெறும் சம்பளதாரரர்)

வரிக்கு உட்பட்ட வருமானக் கணக்கீடு:

மொத்த சம்பளம்: ரூ.15,00,000

மொத்த விலக்குகள் (ரூ.5.25 லட்சம் + ரூ.3 லட்சம் HRA): ரூ.8.25 லட்சம்

நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம்: ரூ.6.75 லட்சம்

புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் வரி அடுக்குகள்:

ரூ. 0 – 4 லட்சம்: 0%

ரூ. 4 லட்சம் – ரூ. 8 லட்சம்: 5%

ரூ. 8 லட்சம் – ரூ. 12 லட்சம்: 10%

ரூ. 12 லட்சம் – ரூ. 16 லட்சம்: 15%

ரூ. 16 லட்சம் – ரூ. 20 லட்சம்: 20%

ரூ. 20 லட்சம் – ரூ. 24 லட்சம்: 25%

ரூ. 24 லட்சத்திற்கு மேல் – 30%

கழிவுகள் மற்றும் விலக்குகள் (புதிய வரிவிதிப்பு முறை)

நிலையான வரிவிதிப்பு: ரூ. 75,000 (கழிவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது)

வரி விதிக்கக்கூடிய வருமான கணக்கீடு:

மொத்த சம்பளம்: ரூ. 15,00,000

நிலையான வருமான விலக்கு: ரூ. 75,000

நிகர வரிவிதிப்பு வருமானம்: ரூ. 14,25,000

புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் செலுத்த வேண்டிய வரி:

ரூ. 0 – 4 லட்சம்: ரூ.0

ரூ.4 லட்சம் – 8 லட்சம் 5% இல்: ரூ.20,000

ரூ.8 லட்சம் – 12 லட்சம் 10% இல்: ரூ.40,000

ரூ.12 லட்சம் – 14.25 லட்சம் 15% இல்: ரூ.33,750

மொத்த வரி: ரூ.93,750

செஸ் (4%): ரூ.3,750

இறுதி வரி பொறுப்பு: ரூ.97,500

முக்கிய குறிப்பு:

இந்த ஒப்பீடு, ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் ஒரு நபருக்கு, பழைய வரி முறை புதிய வரி முறையுடன் ஒப்பிடும்போது ரூ.48,100 வரி சேமிப்பை வழங்குகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து விலக்குகளையும் பயன்படுத்த போதுமான முதலீடுகளைச் செய்ய வேண்டும்

HRA விலக்குகள்

இருப்பினும், அனைத்து வரி செலுத்துவோரும் இந்த சலுகைகளைப் பெற முடியாது. உதாரணமாக, 10(13A) பிரிவின் கீழ் HRA சலுகைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வருகின்றன, குறிப்பாக 24B பிரிவின் கீழ் கீழ் வீட்டுக் கடன் வட்டி விலக்குகளைக் கோருபவர்களுக்கு HRA விலக்கு கிடைக்காது

வருமான வரி முறை தேர்வு

உங்களிடம் கணிசமான வரி சேமிப்பு முதலீடுகள் (PPF, EPF, ELSS, NPS, வீட்டுக் கடன், காப்பீட்டு பிரீமியங்கள்) இருந்தால், HRA சலுகைகளைப் பெற முடியும் என்றால், பழைய வருமான வரி முறையை தேர்வுசெய்யவும்.

உங்களிடம் கோருவதற்கு அதிக விலக்குகள் இல்லையென்றால், முதலீட்டு உறுதிமொழிகள் இல்லாமல் எளிமைப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்பை விரும்பினால், புதிய வருமான வரியை தேர்வுசெய்யவும்.

வரி சேமிப்பில் HRA விலக்கின் பங்கு

HRA என்பது பழைய வரி முறைக்கு ஆதரவாக சமநிலையை உருவாக்கக் கூடிய ஒரு முக்கிய அங்கமாகும். வருமான வரி விதிகள் HRA விலக்கை பெறுவதற்கான சில நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றன, குறிப்பாக வீட்டுக் கடன் வட்டி சலுகைகளைப் பெறும்போது. நிதியாண்டுக்கான வரி முறையைத் தீர்மானிப்பதற்கு முன், வரி செலுத்துவோர் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறார்களா என்பதை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

பிரிவு 24B இன் கீழ் வீட்டுக் கடன் விலக்கு சலுகைகளைப் பெற்றால், HRA விலக்கு சலுகைகளைப் பெற முடியுமா என்பது குறித்து வரி செலுத்துவோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நிபந்தனைக்கு உட்பட்டு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் வீட்டுக் கடன் சலுகைகள் இரண்டையும் ஒன்றாகக் கோரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

HRA மற்றும் வீட்டுக் கடன் சலுகைகளுக்கான தகுதி:

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு

நீங்கள் ஒரு வாடகை வீட்டில் வசித்து, உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக HRA பெற்றால், குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, பிரிவு 10(13A) இன் கீழ் விலக்கு பெறலாம்.

வீட்டுக் கடன் வட்டி விலக்கு

வீட்டுக் கடன் வட்டிக்கு பிரிவு 24(b) இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோரலாம், பின்வரும் நிபந்தனைகள் இருந்தால்:

வீடு சொந்தமாக இருக்கும் நிலையில் அதில் வசித்தல் அல்லது காலியாக இருந்தால்

வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால், வட்டி விலக்குக்கு உச்ச வரம்பு இல்லை.

வீட்டுக் கடனில் அசலுக்கான விலக்கு

வீட்டுக் கடனின் அசல்தொகையை  திருப்பிச் செலுத்துதலில் பிரிவு 80C இன் கீழ் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு கிடைக்கிறது.

HRA மற்றும் வீட்டுக் கடன் சலுகைகள் இரண்டையும் கோருவதற்கான நிபந்தனைகள்

நீங்கள் HRA மற்றும் வீட்டுக் கடன் சலுகைகள் இரண்டையும் கோரலாம்: நீங்கள் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, வேறொரு வீட்டை சொந்தமாக வைத்திருந்தால்.

சொந்தமான வீடு கட்டுமானத்தில் உள்ளது அல்லது வேறு நகரத்தில் அமைந்துள்ளது.

உங்கள் சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த நிலையில், வேறு வாடகை சொத்தில் வசிக்கிறீர்கள்.

இரண்டையும் கோர முடியாத சூழ்நிலைகள்:

உங்கள் சொத்தில் சொந்தமாக இருப்பது மற்றும் வசிப்பது – நீங்கள் வசிக்கும் வீட்டை சொந்தமாக வைத்திருக்கும் நிலையில், வீட்டுக் கடன் வட்டியை செலுத்தி வருவீர்கள். ஆனால் வாடகை செலுத்தவில்லை என்றால், HRA விலக்கு கோர முடியாது.

ஒரே நகரத்தில் சொத்து வைத்திருப்பது  நீங்கள் அதே நகரத்தில் ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருந்தால், அங்கு நீங்கள் தங்க வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தால், உங்கள் வேலை செய்யும் இடம் உங்களுக்குச் சொந்தமான வீட்டில் இருந்து மிக தொலைவில் உள்ளது, அல்லது வேலை காரணமாக சொந்த வீட்டில் வசிக்க முடியாமல் உள்ளது என்று நீங்கள் நிரூபிக்க முடியாவிட்டால், HRA கோர முடியாது.

மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: வட்டி விகிதம் அதிகரிக்கின்றதா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News