இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியும் திவா ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில், ஜீத் அதானி, வைர வியாபாரியின் மகளான திவா ஷாவை கரம் பிடித்தார்.
ஜீத் அதானிக்கும் திவா ஷாவுக்கும் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் சில நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கோடீஸ்வரர் கவுதம் அதானி தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கினார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது.அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது.
அதானி குழுமம் நன்கொடையாக வழங்கும் இந்தப் பணம், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற உதவும் வகையில், உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்படும். கூடுதலாக, குறைந்த கல்வி கட்டணத்தில் இயங்கும் உயர்மட்ட K-12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் நெட்வொர்க்கிற்கான அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
ஜீத் மற்றும் திவாவின் திருமணத்தின் படங்களை தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள கெளதம் அதானி, கடவுளின் அருளால் ஜீத்தும் திவாவும் இன்று புனிதமான திருமண பந்தத்தில் இணைந்ததாக கூறினார். அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படியும், மங்களகரமான கொண்டாட்டத்துடனும் திருமணம் நடைபெற்றது. இது ஒரு சிறிய அளவிலான மிகவும் தனிப்பட்ட விழாவாக இருந்தது. எனவே நாங்கள் விரும்பினாலும் அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மகள் திவா மற்றும் ஜீத்துக்கு உங்கள் அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் மனதார வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா ஆகியோர் திருமணத்திற்கு முன்பு 'உறுதிமொழி' எடுத்தனர். இதன் கீழ் 500 மாற்றுத்திறனாளி சகோதரிகளின் திருமணத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றார். இதுகுறித்து கௌதம் அதானி கூறுகையில், ஜீத்தும் திவாவும் ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி சகோதரிகளின் திருமணத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.
ஒரு தந்தையாக எனது மகனும், மருமகளும் செய்யும் சமூக சேவையில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். இந்த முயற்சியால் பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மகிழ்ச்சி, அமைதி மற்றும் மரியாதையுடன் முன்னேறும் என்று நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த சேவைப் பாதையில் ஜீத்தும் திவாவும் தொடர ஆசிர்வதிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் ஜீத்-திவா நடனமாடுவதைக் காண முடிந்தது. ஜீத் அதானி மற்றும் திவா ஷாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் வீடியோவும் வெளியிடப்பட்டது, இதில் ஜீத்-திவா பிரபல பாடகர் தலேர் மெஹந்தியின் மகன் குர்தீப் மெஹந்தியுடன் நடனமாடினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ