TN Minister Anbil Mahesh Poyyamozhi: சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு வைர விழா இன்று அப்பள்ளியின் வளாகத்திலவேயே வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"மத்திய அரசு தமிழகத்தில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்களின்படி தெரிவிக்கிறது. ஆனால் வழங்க வேண்டிய நிதியைத்தான் வழங்க மறுக்கிறார்கள். நடைமுறையில் இருக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கூட முறையான நிதியை வழங்கவில்லை" என மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வைரவிழாவில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @thamoanbarasan அவர்களோடு இன்றைய தினம் கலந்து கொண்டோம். வைரவிழா நினைவு கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தோம்.
60 ஆண்டுகால… pic.twitter.com/54TQ0nKyh4
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 7, 2025
மாணவர் மனசு பெட்டி...
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,"ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 'மாணவர் மனசு' என்னும் பெட்டியை வைத்துள்ளோம், இருந்தாலும் மாணவர்களுக்கு ஏற்படும் பய உணர்வு காரணமாக அவர்களுக்கு நடக்கும் சிலர் சம்பவங்களை வெளியில் சொல்லாமல் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு ரத்து.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - மக்களே உஷார்..!
கல்வி தகுதி ரத்து செய்யப்படும் - அன்பில் மகேஷ் அதிரடி
அப்படி இருந்தும் கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை விசாரணை செய்து அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அதையும் தாண்டி அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இரும்புக் கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து யார் தவறு செய்தாலும், அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும், இனி அது போன்று நடக்காத வண்ணம் மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க தொடர்ந்து அவர்களுக்கான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது" என்றார்.
ஸ்மார்ட் போர்ட் திட்டம்
மேலும் அவர் சித்தாலப்பாக்கம் பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம் குறித்த கேள்விக்கு,"சித்தாலப்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் பள்ளியில் உள்ள தண்ணீரை குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை நீங்கள் கூறி தெரிந்து கொண்டேன் அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்,"இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடக்க பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம், அதிநவீன ஆய்வுக்கூடங்கள் 8,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கு கொண்டு வந்துள்ளோம். 10 லட்சம் மாணவர்களுக்கு டேப் கொடுப்பதை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் 40 லட்சம் மாணவர்களுக்கு டெக்னாலஜிகளை கொண்டு வந்துள்ளோம்"என்றார்.
முன்னதாக, அரசு பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகளை வழங்கினார். அப்பள்ளியின் 60ஆம் ஆண்டு மலர் வெளியிட்டு முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ