Delhi Assembly Election Results Latest News: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்திய நிலவரப்படி பாஜக முன்னிலையில் உள்ளது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தல் 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், தற்போது பல அதிர்ச்சியளிக்கும் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.
தீய நோக்கங்களும் தவறான நடவடிக்கைகளும்தான் காரணம்: அண்ணா ஹசாரே
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளது. இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்வி குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் குருவாக கருதப்படும் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தீய நோக்கங்களும் அவர்களின் தவறான நடவடிக்கைகளும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவுக்கு வழிவகுத்தன என்று மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.
மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள சர்ச்சை
மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள சர்ச்சையை அண்ணா ஹசாரே ஒரு முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினார். மேலும் மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசையை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக அவர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை நிறைவடையவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய தயாராகி வருகின்றது. முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவை பெரிய அளவில் தோற்கடித்தது. ஆனால், இப்போது அதற்கு பாஜக தகுத்த பதிலடியை கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் டெல்லியின் முன்னேற்றம், ஊழல், பெண்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஊழல் வழக்குகள் என ஆம் ஆத்மி கட்சி செய்த அனைத்து தவறுகளையும் பாஜக சுட்டிக்காட்டியது.
குடிகாரர்களின் நகரமான தலைநகரம்
டெல்லியில் இப்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளால் தற்போதைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் பதவிக் காலம் பெரும் பதற்றத்தையும் ஏற்ற இறக்கங்களையும் கண்டது. ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு இது பெரிய காரணமாகியது. மது பாட்டில்களில் "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு "டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்றுகிறது" என்று பாஜக குற்றம் சாட்டியது.
சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி குறித்து பேசிய அண்ணா ஹசாரே "மது கொள்கை மற்றும் செல்வம் மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசை காரணமாக, அவர் (கெஜ்ரிவால்) தனது நல்ல பெயரை இழந்தார்" என்று கூறினார். "ஒருபுறம், கெஜ்ரிவால் நல்ல குணத்தைப் பற்றிப் பேசுகிறார், மறுபுறம், அவர் மதுவை ஊக்குவிக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகத்தான் அவரது வாக்குகள் குறைந்துள்ளன" என்று அண்ணா ஹசாரே மேலும் கூறினார்.
கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிற மூத்த தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அன்னா ஹசாரே கூறுகையில், "அரசியலில், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் பொதுவானவை. இருப்பினும், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, இல்லையெனில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு நிரூபிக்க வேண்டியது அவசியம். உண்மை உண்மையாகவே இருக்கும், பொய் எப்போதும் பொய்தான். எனவே, இந்த விஷயங்களில் உண்மையின் பாதையைப் பின்பற்றுவது முக்கியம்." என்றார்.
"கெஜ்ரிவால் சுயநலவாதி ஆனார். ஆனால் அவர் அதை புரிந்து கொள்ளவில்லை. அவர் தவறான பாதையில் சென்று இப்போது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்" என்று அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
இதற்கிடையில், சமீபத்திய நிலவரப்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையதளத்தின் படி, பாஜக 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர்! யார் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?
மேலும் படிக்க | டெல்லியில் மலரும் தாமரை.. ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? ஓர் அலசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ