Viral Video Of Vijay Wife Sangeetha Reacting To His Gift : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். வெகு விரைவில் தமிழ் திரையுலகை விட்டு விலக இருக்கும் இவர் குறித்து தினம் ஒரு தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து, இவர் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தை ஒட்டி கொடுத்திருக்கும் ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்-சங்கீதா:
நடிகர் விஜய், இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் சங்கீதாவை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம், பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். சங்கீதா, இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அவர் சிறு பிள்ளையாக இருக்கும் போதே லண்டனுக்கு அழைத்து சென்று செட்டிலாகி விட்டனர்.
ஒரு முறை நட்பு ரீதியாக விஜய்யின் வீட்டிற்கு இவர்கள் வந்திருந்தனர், அப்போது விஜய்யை சங்கீதா படப்பிடிப்பு தளத்தில் சென்று சங்கீதா பார்த்திருக்கிறார். திடீரென விஜய்யின் பெற்றோர் அவரிடம் திருமண பேச்சு வார்த்தைகளை எடுக்க, விஜய்யும் அவருக்கு சம்மதம் தெரிவித்தார். இப்படித்தான் இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது.
பெரியோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும், விஜய்யும் சங்கீதாவும் நல்ல இல்வாழ்க்கையையே நடத்தினர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு பிள்ளைகளும் இருக்கின்றனர். இப்போது இவர்கள் ஒன்றாக இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் அந்நியோன்ய தம்பதிகளாக இருந்தனர் என்பது உண்மை. அப்படியிருந்த சமயத்தில் விஜய் தனது அன்பு மனைவிக்காக காதலர் தினத்தன்று பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
கடந்த பிப்., 14ஆம் தேதி உலகெங்கிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்படியொரு காதலர் தினத்தை (சில ஆண்டுகளுக்கு முன்பு) விஜய்யும் சங்கீதாவுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார். அது, இந்த வருட காதலர் தினத்திற்கு வைரலானது. அந்த வீடியோவில், தன் ஆசை மனைவிக்காக ஒரு வாட்சை அனுப்பியிருக்கிறார். அதை பார்த்த சங்கீதா “எனது கணவர் காதலர் தினத்திற்காக இதை எனக்கு அனுப்பியிருப்பார் என நினைக்கிறேன். ரொம்ப நன்றி விஜய்” என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறுகிறார்.
Blessing your Timeline a rare clips of THALAPATHY and Sangeetha ma'am @actorvijay pic.twitter.com/XoZWX5Ci1r
— Vijay Team Online (@VijayTeamOnline) February 16, 2025
இந்த வீடியோவை பார்த்த சிலர், இது பழைய வீடியோ என்று கமெண்ட் செய்ய, இன்னும் சிலர் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதை பார்க்க நன்றாக இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்போது ஒன்றாக இருக்கிறார்களா?
சங்கீதா, விஜய்யின் எந்த பட நிகழ்ச்சிகளுக்கு அவருடனேயே வந்து அவருடனேயே வீட்டிற்கு செல்வார். பல இடங்களுக்கு ஒன்றாகவும் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக இவர்களின் உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு கூட சங்கீதா தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியாகத்தான் சென்றார். விஜய்யும், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் இருந்து, வெற்றி விழாக்கள் வரை அனைத்திற்கும் தனியாகவே செல்கிறார்.
தற்போது சங்கீதா லண்டனிற்கே சென்று செட்டிலாகி விட்டதாகவும், விஜய் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் தனியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த சரியான ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
மேலும் படிக்க | செம ஸ்டைலாக மாடர்ன் உடையில் விஜய் மனைவி சங்கீதா! சமீபத்திய வைரல் புகைப்படம்..
மேலும் படிக்க | அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ