Madhya Pradesh Latest News: இன்று (பிப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை) காலை மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடந்த சாலை விபத்தில் வேன் மீது டிப்பர் லாரி மோதியதில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது சுமார் 20 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாலை விபத்து குறித்து முழுத் தகவலையும் பார்ப்போம்.
இந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் அதிக காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக குவாலியருக்கு அனுப்பப்பட்டனர் மற்றவர்கள் பிந்த் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சாலை விபத்து சம்பவம் குறித்து பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அசித் யாதவ் கூறுகையில், 'ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே அதிகாலை 5 மணியளவில் ஒரு திருமண விழாவில் இருந்து ஒரு கூட்டம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.
திருமண விழாவிற்கு வந்தவர்களில் சிலர் வேனில் அமர்ந்திருந்ததாகவும், மற்றவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்ததாகவும், திடீரென வேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீதும் அவர்களின் வாகனம் மீதும் மோதியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து கோபமடைந்த உள்ளூர்வாசிகள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாலையில் 'சக்கா ஜாம்' (மறியல்) நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து சம்பவ இடத்திற்கு வந்ததாக எஸ்பி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை குறித்து பிந்த் மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவாவின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க முயன்றபோது டிப்பர் லாரி வேன் மீது மோதியிருக்கலாம் எனவும், காயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பிந்த் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு மேலும் இரண்டு பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் பிந்த் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த விபத்தி இறந்தவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'சிலர் திருமண விழாவுக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் ஏற்றிச் செல்ல அமர வைக்கப்பட்டனர். பின்னால் பைக்கில் மூன்று குடும்ப உறுப்பினர்களும் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையில், எங்கிருந்தோ வேகமாக வந்த ஒரு லாரி, எங்கள் வேன் மீது மோதியது. இந்த விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் சுமார் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர்' என்றார்.
மேலும் படிக்க - ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க - ஓய்வூதியம் மற்றும் அரசு மானியங்கள் பெரும் வங்கி கணக்கு குறித்து RBI புதிய உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ