ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றால் நாக் அவுட் உட்பட அனைத்து போட்டிகளிலும் துபாயில் நடைபெறும். நாளை பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் உள்ள முக்கிய வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளனர். சிலர் கடைசி நிமிடங்களில் விலகி உள்ளனர். இதனால் 15 பேர் கொண்ட அணியை எடுப்பதில் ஒவ்வொரு நாடும் சிரமப்பட்டது. இந்நிலையில் ஒருவழியாக அனைத்து அணிகளும் வீரர்களின் பெயரை இறுதி செய்துள்ளன.
மேலும் படிக்க | கேப்டனாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்? சஞ்சு சாம்சனுக்கு ஆப்ரேஷன்! - வேறு யார் இருக்கா?
குழு A
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.
பங்களாதேஷ்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌம்யா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், பர்வேஸ் ஹொஸ்மான், பர்வேஸ் ஹொஸ்மான் சாகிப், நஹித் ராணா.
நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், வில் யங்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஷாஃப் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷாஹ், ஷஹீன்.
குழு B
ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், நூர் அஹ்மத், நூர் அஹ்மத், நவீத் சத்ரன். பயண இருப்பு: தர்விஷ் ரசூலி, பிலால் சாமி
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் ஷார்ட், மத்தம்பா சங்கா, ஏ. பயண இருப்பு: கூப்பர் கோனாலி.
தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டூஸ்சென் வான்சென், டூஸ்சென் வான்சென். பயண இருப்பு: குவேனா மபாகா
மேலும் படிக்க | மும்பை அணியின் கேப்டனாகும் ரோகித் சர்மா? ஐபிஎல் 2025ல் அதிரடி திருப்பம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ