Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : நடிகைகள் பலர், திரையுலகிற்கு வந்த புதிதில் தட்டுத்தடுமாறினாலும் பின்பு சரியான நிலையை அடைந்த பின்பு ஒரு நல்ல இடத்தை பிடித்து விடுவர். அதன் பின்பு, இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் ஆகும். ஆனால், இங்கு ஒரு வளர்ந்து வரும் நடிகை நடித்திருக்கும் 3 படங்கள் வரிசையாக ஹிட் ஆகி அவை 3000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் பெற்றுள்ளது. அந்த நடிகை யார் தெரியுமா?
நயன்தாரா-த்ரிஷா எல்லாம் கிடையாது!!
தமிழ் திரையுலகை அல்லது தென்னிந்திய திரையுலகை பொறுத்தவை பெரிய நடிகைகளாக கருதப்படுபவர்கள், நயன்தாரா-த்ரிஷாதான். ஆனால், இவர்கள் நடிக்கும் படங்களே எதிர்பார்க்கும் அளவிற்கு திரையரங்குகளில் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இந்த நடிகை திரையுலகிற்கு வந்தே இன்னும் 10 வருடங்கள் கூட ஆகவில்லை. இவருக்கு இப்போதுதான் 28 வயதே ஆகிறது. இந்த நிலையிலேயே, அவர் நடிக்கும் அத்தனை படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது.
யார் அவர்?
இந்த பெருமைக்குரிய நடிகை வேறு யாருமில்லை, ராஷ்மிகா மந்தனாதான். கன்னட திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான இவர், தொடர்ந்து அந்த மொழியிலேயே 3 படங்களில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு எப்படியோ தெலுங்கு மார்கெட் கிடைக்க அதில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் ஹிட் அடிக்கவும் செய்தன. இதனால், அவருக்கு தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் பலவித பட வாய்ப்புகள் கிடைத்தன.
3 படங்களில் 3000 கோடி!!
ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி முதன்முறையாக பெரிய ஹிட் அடித்த படம், புஷ்பா1: தி ரைஸ். இந்த படம், 2021ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து அவர் 2023ல் நடித்திருந்த படம்தான், அனிமல். இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க, ராஷ்மிகாவுக்கு ஜோடியாக ரன்பீர் கபூர் நடித்திருந்தார். இந்தியில் உருவான இந்த படம் உலகளவில் பெரிய ஹிட் அடித்தது. இதன் மொத்த வசூல், சுமார் 917 கோடி என சொல்லப்படுகிறது.
இதன் பிறகு ராஷ்மிகா நடித்திருந்த படம் புஷ்பா 2: தி ரூல். அல்லு அர்ஜுனுடன் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ராஷ்மிகா, இந்த முறையும் இப்படத்தில் ஸ்ரீவல்லி கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். இந்த படம், உலகளவில் சுமார் ரூ.1800 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்தது.
அடுத்ததாக ராஷ்மிகா நடித்திருக்கும் இந்தி படம் ச்சாவா (Chhaava). இதில், அவர் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா, மஹாராணி யேசுபாய் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், இந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. இந்தியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பை கொடுத்துள்ளனர்.ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் இந்த படம், 4 நாட்களில் சுமார் 200 கோடி வசூலை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. ச்சவ்வா படம், இன்னும் பல கோடிகளை வசூலிக்க இருக்கும் நிலையில், 3 படங்களில் 3000 கோடி கலெக்ஷன் கொடுத்த நாயகி இவர்தான் என்ற பட்டத்தை ராஷ்மிகா விரைவில் தனக்கு சொந்தமாக்கி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | டாப் 10 உலக அழகிகள்: லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகை! யார் அவர் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ