Viral Video Of College Student Paraglides To College : ஒரு சிம்பிளான விஷயத்திற்காக பலர், பல விதமான சாகசங்களை செய்வதை பார்த்திருப்போம். அதிலும், டிராஃபிக் அதிகமாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள், தாங்கள் செல்ல நினைக்கும் இடத்திற்கு செல்ல சில வித்தியாசமான வேலைகளை பார்ப்பர். அப்படி, ஒரு மாணவர் செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாராசூட்டில் வந்த மாணவர்..!
ஒரு இடத்திற்கு அவசரமாக செல்ல வேண்டும் என வீட்டில் இருந்து கிளம்பும் போதுதான், அங்கு செல்ல நமக்கு தாமதம் ஆகும். அப்படி தாமதம் ஆவதற்கு நம்ம ஊர் ட்ராஃபிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். அதிலும், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த டிராஃபில் தலை விரித்தாடும். அப்படி, அதிக ட்ராஃபிக் நிறைந்த மகாராஷ்ட்ராவின் ஒரு பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், கல்லூரி பையை தோளில் மாட்டிக்கொண்டு வந்த அந்த மாணவன், சாதாரணமாக ஆட்டோவில் அல்லது பஸ்ஸில் எல்லாம் வரவில்லை. அவர் வந்திரங்கியது ஒரு பேராசூட்டில்!
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், கல்லூரி மாணவர் தகுந்த உபகரணங்களுடன் ஒரு பைலட்டின் உதவியுடன் மலை உச்சியில் இருந்து குதிப்பது தெரிகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மாணவர் பாராசூட்டுடன் சேர்ந்து மாயமாகி விருகிறார். அந்த பாராசூட், மாணவர் பயிலும் கல்லூரியை நோக்கி நகர்கிறது.
இந்த இடம், பஞ்சாங்கி எனப்படும் இடத்தில் இருக்கிறது. இது சாகச விரும்பிகளுக்காக இருக்கும் ஒரு பூங்காவாகும். இந்த இடத்தில் இருந்துதான் அந்த மாணவர் தனது கல்லூரிக்கு சென்றிருகிறார்.
பல ஆயிரம் லைக்ஸ்கள்..
5 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோ தற்போது வரை பல ஆயிரம் லைக்ஸ்களையும்-மில்லியன் கணக்கில் வியூஸ்களையும் பெற்றுள்ளது. அதே போல, நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவில் தங்களது கருத்துகளை கமெண்ட் செய்திருக்கின்றனர்.
ஒருவர், “தம்பி என் கார்ல வந்துருந்தா உன்ன 10-15 நிமிஷத்துல காலேஜ்ல விட்ருப்பேன்..என்பா இப்டி உயிரை பணயம் வைக்கிற..” என்று கேட்டிருக்கின்றார். இன்னும் சிலர், “இந்த பையன் ரொம்ப ஆபத்தானவன் போலையே..” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு சிலர் இந்த தம்பியின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
பரீட்சையில் போய் என்ன எழுதியிருப்பார்?
கல்லூரி பரீட்சைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அந்த மாணவர் அவ்வளவு விரைவாக பாராசூட்டில் சென்றார். ஆனால், பறந்து போன கிரக்கத்தில் அந்த மாணவர் படித்ததையே மறந்திருப்பாரோ என்ற சந்தேகம் நெட்டிசன்களுக்கு எழுந்துள்ளது. இதனால், பரீட்சைக்கு சென்று அவர் எழுதினாரா அல்லது உறங்கி விட்டாரா என்ற கேள்வியையும் பலர் கேட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க | Viral Video: ஒரு பக்கம் குழந்தை.. மறுபுறம் கூட்டம்.. வைரலான பெண் காவலர் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ