Tamil Nadu Budget Session 2025 Latest Update: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டமானது தொடங்கியது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் சில முக்கிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விரைவில் சாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும் நாள்?
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினுடைய அடுத்த கூட்டத்தினை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வருகிற 2025 மார்ச் மாதம் 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணிக்கு கூட்டியுள்ளேன். அன்றைய தினம் தமிழக நிதி அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்கள் எனக் கூறினார்.
வேளாண் பட்ஜெட் 2025 தாக்கல் எப்பொழுது?
மேலும் அடுத்த நாள் (மார்ச் 15, சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எந்த்ரும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மேலும் பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டபேரவை விதி கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்
மேலும் சட்டபேரவை விதி 193, 1ன் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள், பேரவை விதி 189, 1ன் கீழ் 2024-25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.
மேலும் படிக்க - தமிழக பட்ஜெட் 2025: இந்த 3 நாள்களுக்கு கருத்துக் கேட்புக் கூட்டம்; இதனால் என்ன பயன்?
மேலும் படிக்க - TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ