Bhudhan Udhayam: புதன் கிரகம் புத்தி, வணிகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதனின் அருள் இருந்தால், ஒருவர் தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தொழில், கல்வியில் முன்னேற்றம் அடைகிறார்.
புதன் பெயர்ச்சி மட்டுமல்லாது, புதனின் உதயம், அஸ்தமனம் ஆகியவையும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் பாதிக்கிறது. மகாசிவராத்திரி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக புதன் உதயமாவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களைக் கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
புதன் உதயம் பலன்கள்: 25 பிப்ரவரி 2025 அன்று மாலை 6:15 மணிக்கு கும்பத்தில் புதன் உதயமாக உள்ளது. சூரிய பகவான் பிப்ரவரி 13ம் தேதி கும்ப ராசிக்குள் நுழைந்த நிலையில் புத ஆதித்யயோகமும் இணைந்துள்ளது.
மகாசிவராத்திரி 2025: சிவனுக்கு உகந்த மகாசிவராத்திரிக்கு முன்னதாக புதன் உதயமாவதால் சில ராசிகள், குறிப்பாக வேலையில், தொழிலில், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ரிஷப ராசி: நிதி நெருக்கடி, குடும்பத்தில் சச்சரவு அல்லது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்தவ ரிஷப ராசியினர்கள் புதனின் உதயத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள். படிப்பில் சிக்கல்களைச் சந்திக்கும் மாணவர்கள் இப்போது அதிலிருந்து விடுபடுவார்கள். காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.
மிதுன ராசி: புதனின் உதயம் மிதுன ராசியினருக்கு நல்ல செய்திகளைத் தரும். பயணங்கள், உறவுகள் மற்றும் தொழிலில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். தொலைதூரப் பயணத்திற்கான திட்டங்களைத் தீட்டலாம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இதனால், நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். புதனின் உதயம் அவர்களுக்கு இந்தச் சச்சரவில் இருந்து வெளிவர வழி திறக்கும்.
சிம்ம ராசி: புதனின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு, நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார நிலை மேம்படும். கடந்த கால நிதி பிரச்சனைகள் நீங்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரம் முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த தொடர்பு ஏற்படும்.
கன்னி ராசி: புதனின் உதயம் காரணமாக, கன்னி ராயினர் ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் அனுபவிப்பார்கள். வேலையில், தொழில் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் நிம்மதி அடைந்து முன்னேறுவார்கள். சட்ட மோதல்கள் அல்லது சிக்கலான விஷயங்களில் இருந்து விடுபடலாம். சேவைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு நேரம் நல்லது, ஆனால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். கவனக்குறைவு நோயை ஏற்படுத்தும்.
கும்ப ராசி: புதனின் உதயம் கும்ப ராசியினருக்கு மிகவும் நல்ல செய்தியை தந்துள்ளது. இந்த வேலை, கல்வி, காதல், குடும்பம் மற்றும் தொழில் ஆகிய அனைத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். காதலர்களுக்கிடையேயான உறவு மேலும் வலுவடையும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் புதனின் அருளால் எதிர்மறை விளைவுகள் குறையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.