Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
Kalaingar Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் ரூ. 1000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly News: ஆளுநர் வரும்போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது என்றும் சபாநாயகர் பேசி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மரபை ஆளுநருக்காக மாற்ற முடியாது எனவும், தமிழ்நாடு அரசின் ஒரே ஆளுநருக்கு வாசிக்க விருப்பமில்லை என்பதை தெரிந்து கொண்டேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly Latest Updates 2025: ஆண்டின் முதல் கூட்டத்தொடராக தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்து உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார்.
2025இன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரை, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் என பல்வேறு விஷயங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
MK Stalin On Adani Case Issue: அமெரிக்காவில் அதானி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.