Vikram prabhu Glimpse: இயக்குநர் ராதா கிருஷ்னா ஜகர்லமுடி இயக்கத்தில், UV கிரியேஷ்ன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் 'காதி' படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.
இந்நிலையில், நேற்று(ஜன.15) விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ஸ்ட் லுக் மற்றும் காதி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸை அப்படக் குழு வெளியிட்டது. இதுவரையில் அவரது திரைப் பயணத்தில் இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த கிள்ம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர்
காதி திரைப்படத்தின் இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி நேற்று எக்ஸ் தளத்தில், நடிகர் விக்ரம் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது; @iamVikramPrabhu உங்களுக்கு எனது பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காதி திரைப்படத்தில் உங்களது #DesiRaju கதாபாத்திரத்தை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ரசிகர்கள் பார்க்க காத்திருக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.
மேலும் படிங்க: ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
'வேதம்' வெற்றியை தொடர்ந்து 'காதி'
வேதம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா ஷெட்டி மற்றும் க்ரிஷ் ஜகர்லமுடி மீண்டும் இணைந்துள்ளனர். அதேபோல் UV கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் காதி திரைப்படம் நான்காவது படமாகும்.
நடிகை அனுஷ்காவின் க்ளிம்ப்ஸ் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் அனுஷ்கா ஒருவரின் தலையை வெட்டி கொண்டு செல்லும் காட்சி வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதனைத் தொடர்ந்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் பிரபுவின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் விக்ரம் பிரபு காவல்துறையால் துரத்தப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து வில்லன்களை எதிர்கொள்ளும் அதிரடி காட்சிகளும், நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் விக்ரம் பிரபு பைக்கிள் அருகருகே செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
ஏப்ரலில் வெளியாகும் காதி திரைப்படம்
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடிக்க, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ