Budget 2025: இனி மத்திய அரசும் பெண்களின் கணக்கில் பணம் செலுத்தும்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Union Budget 2025: பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு மத்திய பணப் பரிமாற்றத் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு பரிசீலிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2025, 03:13 PM IST
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முழு பட்ஜெட்.
  • பெண்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன?
  • முழு விவரம் இதோ.
Budget 2025: இனி மத்திய அரசும் பெண்களின் கணக்கில் பணம் செலுத்தும்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு title=

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கு முன்னர் பட்ஜெட்டில் வரக்கூடிய சில சாத்தியமான அறிவிப்புகள் குறித்து நிதி அமைச்சக வட்டாரங்கள் மூலம் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. பெண்களுக்கு உதவ பெண்களுக்கான பணப் பரிமாற்றத் திட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என்றும், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Budget 2024 Expectations:

பெண்களுக்கான இந்த திட்டம் மட்டுமல்லாமல், பொருளாதாரத்தை உயர்த்தவும் நுகர்வை அதிகரிக்கவும், அரசாங்கம் வரிகளைக் குறைப்பதை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நேரடி வரியாக இருந்தாலும் சரி அல்லது மறைமுக வரியாக இருந்தாலும் சரி அனைத்திலும் இதன் தாக்கம் இருக்கும். சுற்றுசூழல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கடல்சார் தொழி துறைகளுக்கு ஒரு புதிய மானிய முறை தேவை என்றும், பட்ஜெட்டில் இது குறித்து அரசு கவனம் செலுத்தலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முழு பட்ஜெட்

2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman)  பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். இதன் மூலம் அவர் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது முழு பட்ஜெட்டாகவும் இது இருக்கும். 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு மெகா செய்தி: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம், கம்யூட்டேஷன் விதிகளில் மாற்றம்

பட்ஜெட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டபோது, ​​பொருளாதார நிபுணரும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் இயக்குநருமான பேராசிரியர் என்.ஆர். பானுமூர்த்தி, 'பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு மத்திய பணப் பரிமாற்றத் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு பரிசீலிக்கலாம்' என்றார். இதற்குக் காரணம், எங்கள் ஆய்வில் பெண்களுக்கு கிடைக்கும் உதவிகள் மூலம் குடும்பம் உண்மையில் அதிக நன்மைகளைப் பெறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளோம்' என்று குறிப்பிட்டார். 'ஆனால் கருவூலத்தில் எந்தச் சுமையும் இல்லாத வகையில் பெண்களுக்கான திட்டத்தைத் தொடங்க வேண்டும். இதற்காக, பெண்கள் தொடர்பான பிற ஒத்த திட்டங்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.' என்று என்.ஆர். பானுமூர்த்தி மேலும் கூறினார். 

பெண்களை இலக்காக கருதும் அரசியல் கட்சிகள்

பல காலமாக அரசியல் கட்சிகள் பெண்களை ஒரு திடமான வாக்கு வங்கியாக பார்க்கின்றன. பெண்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக, இன்னும் சில நாட்களில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் பெண்களுக்கு ரொக்கத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளன. முன்னதாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே போன்ற அறிவிப்புகள் காணப்பட்டன. இது தொடர்பாக, NIPFP இன் பேராசிரியரும், மியூனிக் சார்ந்த சர்வதேச பொது நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான லேகா சக்ரவர்த்தி, 'பெண்களின் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்வது ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தர தீர்வு கிடையாது. இது ஒரு குறுகிய கால தீர்வு. பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கடன் விநியோகத்தை உறுதி செய்வது நீண்ட காலத்திற்கு அவர்களுக்கு உதவும்.' என்று கூறினார்.

மேலும் படிக்க | SIP Mutual Funds: மாதம் ரூ. 2,500 முதலீடு லட்சங்களாக பெருக எத்தனை ஆண்டு தொடர் முதலீடு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News