Stomach Health Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதை போன்று வயிற்றையும் ஆரோக்கியமானதாக வைத்திருப்பது ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் உண்ணும் உணவுதான் உங்களின் உடல்நலனில் பெரிய தாக்கத்தை செலுத்தும் எனலாம்.
அப்படியிருக்க, வயிறு ஆரோக்கியமானதாக இருப்பதன் மூலம் செரிமானம் சீராக இருக்கும். இதன்மூலம், உணவு மூலம் கிடைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தையும் உடல் உறிஞ்சிக்கொள்ளும். இதனால், நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடன் இருப்பீர்கள். சரும ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதி அனைத்தும் கிடைக்கும்.
மாறாக, வயிற்றின் ஆரோக்கியம் மோசமானதாக இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எப்போதும் வயிற்று வலி, வயிற்றில் அசௌகரியம் போன்ற உணர்வுடனே இருப்பீர்கள். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து போதிய அளவில் கிடைக்காது. எப்போதும் சோர்வாகவே இருப்பீர்கள். வயிற்றின் ஆரோக்கியம் கெடுவதற்கு மோசமான உணவுப் பழக்கவழக்கம்தான் முக்கிய காரணமாக இருக்கும். அந்த வகையில், இந்த 5 உணவுப் பழக்கவழக்கங்கள்தான் வயிற்றின் ஆரோக்கியத்தை அதிகமாக மோசமாக்கின்றன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | 1.5 வருடத்தில 45 கிலோ குறைந்த சாரா அலிகான்! தினமும் செய்த 2 விஷயங்கள்..
குறைவான நார்ச்சத்து
நார்ச்சத்து குறைவான உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றின் ஆரோக்கியம் மோசமாகும். நார்ச்சத்து குறைவான உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உங்களின் குடல்களில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு பாதிப்பு உண்டாகி, குடல் இயக்கத்திலும் பிரச்னை உண்டாகலாம்.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வயிற்றின் ஆரோக்கியத்தை மோசமானதாக மாற்றும். இந்த உணவுகளில் நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்காக அதிகமான உப்பு, சர்க்கரை ஆகியவற்றை பயன்படுத்தியிருப்பார்கள். இது குடலில் உள்ள நுண்ணுயிர்களை பாதிக்கும். தொடர்ந்து இதுபோன்ற உணவுகளையே உண்டால் உப்புசம், வயிற்றில் அசௌகரியம் உண்டாகும்.
அதிக இனிப்புகள் கொண்ட உணவு
இந்த உணவுகளை உண்பதால் வயிற்றில் வீக்கங்கள் அதிகரிக்கலாம். குடலின் நுண்ணுயிர்களை பாதித்து, செரிமானத்தில் பிரச்னையை உண்டாகும். தொடர்ந்து இனிப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உப்புசம் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்னையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | முளைத்த பூண்டு ஒரு பல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
அதிக கொழுப்புகள் நிறைந்த உணவு
இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றின் ஆரோக்கியம் மோசமானதாக மாறும். அதிக கொழுப்புகள் கொண்ட உணவுகளால் செரிமானம் மெதுவாகி, உப்புசம் மற்றும் குமட்டலை உண்டாகும். மேலும் இதனை அதிகமாக உட்கொண்டால் வயிற்று வலி, பித்தப்பைக் கற்கள், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகள் வரும்.
காலை உணவுகளை தவிர்ப்பது
காலை உணவுகளை தவிர்ப்பதால் வயிற்றின் ஆரோக்கியம் மிக மோசமானதாக மாறும். அதாவது, இரவில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பீர்கள். எனவே, நீங்கள் காலையிலும் சாப்பிடாமல்விட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும். வயிறும் அசௌகரியமாக இருக்கும். வளர்ச்சிதை மாற்றத்தை இது பாதிக்கும், உடல் ஆற்றல் குறையும். ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும். இதனால் ஒட்டுமொத்த வயிற்றின் ஆரோக்கியமும் மோசமாகும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரலின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... எச்சரிக்கையாக இருங்க மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ