4 நாளில் திருமணம்... மகளின் மார்பிலேயே சுட்ட தந்தை - அதிர்ச்சி பின்னணி

Latest Crime News: சொந்த மகளையே பொது இடத்தில், அதுவும் போலீசார் கண் எதிரே தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்த முழு பின்னணியையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 15, 2025, 04:37 PM IST
  • இச்சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
  • தந்தையும், உறவினரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
  • அவர்கள் அருகில் போலீசார் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
4 நாளில் திருமணம்... மகளின் மார்பிலேயே சுட்ட தந்தை - அதிர்ச்சி பின்னணி title=

Latest Crime News In Tamil: மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் சொந்த மகளை, தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தேறி உள்ளது. அதுவும் போலீசாரின் கண் எதிரே, பொது இடத்தில் வைத்து துப்பாக்கியால் மகளை சுட்டுக்கொன்றுள்ளார். 20 வயதான அந்த பெண்ணுக்கு இன்னும் நான்கு நாள்களில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. 

பெற்றோர் பார்த்திருக்கும் மணமகன் தனக்கு பிடிக்கவில்லை என்றும் தன் காதலரை திருமணம் செய்துவைக்கும்படி என்றும் அந்த பெண் கூறியதால், தந்தை அவரை கொன்றதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு

தனு குர்ஜார் என்ற அந்த 20 பெண், நேற்று இரவு 9 மணியளவில் குவாலியர் நகரில் உள்ல கோலா கா மந்திர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்னர், தனது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர் திருமணத்தை நிச்சயம் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி வீடியோவில் பேசி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, அந்த வீடியோவில் தந்தை மகேஷ் மற்றும் பிற குடும்பத்தினர் தன்னை இக்கட்டான நிலைக்கு தள்ளியிருப்பதாக வீடியோவில் குற்றஞ்சாட்டியிருந்தார். 

மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..

6 வருட காதல்

தனு அந்த வீடியோவில் பேசியதாவது,"எனக்கு விக்கியை திருமணம் செய்ய வேண்டும். என் குடும்பத்தினர் ஆரம்பத்தில் எங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். அதன்பின் மறுத்தனர். என்னை தினமும் அடித்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு என் குடும்பத்தினரே காரணம்" என்றார். தனு குறிப்பிடும் அந்த நபரின் முழு பெயர் பிக்கம் விக்கி மாவாய் ஆவார். இவர் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரைச் சேர்ந்தவர். இவரும், தனுவும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

சமாதானம் பேசிய போலீசார்

அந்த வீடியோ வைரலானதை ஒட்டி, காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தலைமையிலான காவல்துறையினர் தனுவின் வீட்டிற்கு விரைந்தனர். மேலும் இரு தரப்புக்கும் இடையே அவர்கள் பிரச்னையை சுமுகமாக முடிக்க நினைத்தனர். அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரும் கூட இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தார். 

காவலர்களின் பேச்சுவார்த்தையின் போது, தனு இனி பெற்றோரின் வீட்டில் தங்கமாட்டேன் என்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு நடத்தும் மையத்தில் தன்னை அனுமதிக்கும்படி தனு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் தனு இவ்வாறு கூறியுள்ளார்.

தந்தை கைது... தப்பியோடிய உறவினர்...

அப்போது தனுவிடம் தனியாக பேச வேண்டும் என தந்தை மகேஷ் அவரை தனியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மகேஷ் தனுவின் மார்பில் சுட்டுள்ளார். உறவினர் ராகுல், தனுவின் நெற்றி, கழுத்து, கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் உள்ள பகுதியில் சுட்டுள்ளார். அப்போதே படுகாயம் அடைந்து மரணமடைந்தார். 

மகேஷ் மற்றும் ராகுல் பின்னர் காவல்துறையினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நோக்கி துப்பாக்கியை திருப்பி, யாராவது தங்களை பிடிக்க வந்தால் சுட்டுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். இருப்பினும் மகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார், ஆனால் ராகுல் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றார் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"மகேஷ் குர்ஜார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ராகுலைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தனுவின் சமூக ஊடகக் கணக்குகளையும் மதிப்பாய்வு செய்து வருகிறோம்" என்றனர். 

மேலும் படிக்க | மகா கும்பமேளா: உ.பி.,க்கு வரும் வருவாய் எவ்வளவு தெரியுமா? கேட்டால் அரண்டு போவீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News