Birth control pills Side Effects | கருத்தடை மாத்திரைகள் பெண்கள் மத்தியில் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி தான் கருத்தடை முறைகள் குறித்து இந்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த ஆராய்ச்சியில், கருத்தடை முறைகளைப் பயன்படுத்திய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இந்த மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பு அதிகமாக இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் கொண்ட கருத்தடை முறைகள் அதிக அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
கருத்தடை முறைகளின் வகைகள்:
காம்பைன்ட் எஸ்ட்ரோஜன்-ப்ரோஜெஸ்டின் மாத்திரைகள், வெஜைனல் ரிங், ஸ்கின் பேட்ச், ப்ரோஜெஸ்டின்-ஒன்லி மாத்திரைகள், இண்ட்ராயூடரின் சாதனங்கள், இம்ப்ளாண்ட்ஸ் மற்றும் இன்ஜெக்ஷன்கள்
ஆபத்துகள்:
காம்பைன்ட் எஸ்ட்ரோஜன்-ப்ரோஜெஸ்டின் மாத்திரைகள், இஸ்கிமிக் ஸ்ட்ரோக் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றன. குறிப்பாக மாரடைப்பு. வெஜைனல் ரிங், இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் அபாயத்தை 2.4 மடங்கு மற்றும் இதயத் தாக்குதலின் அபாயத்தை 3.8 மடங்கு அதிகரிக்கிறது. ஸ்கின் பேட்ச், இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் அபாயத்தை 3.4 மடங்கு அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை.... இந்த உணவுகள் புற்றுநோயை வரவழைக்கும் ஆபத்தை கொண்டவை
பாதுகாப்பான வழிகள்:
ப்ரோஜெஸ்டின்-ஒன்லி இண்ட்ராயூடரின் சாதனங்கள், இதய ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சி, கருத்தடை முறைகளின் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. மருத்துவர்கள், இந்த முறைகளை பரிந்துரைக்கும் போது, இதய ஆரோக்கியத்திற்கான அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் கொண்ட கருத்தடை முறைகளை பயன்படுத்தும் பெண்கள், இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக்கின் அபாயத்தை குறைக்க, மருத்துவ ஆலோசனையுடன் பாதுகாப்பான முறைகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த தகவல் மருத்துவ எச்சரிக்கைக்காக மட்டுமே பகிரப்படுகிறது. இந்த தகவலை வைத்து எந்தவிதமான முன்முடிவுக்கும் வர வேண்டாம். எந்த சந்தேகமாக இருந்தாலும் மருத்துவரை சந்தித்து விளக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
கருத்தடை மாத்திரைகளை வாங்குவதற்கு தமிழ்நாட்டில் கடுமையான சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே மாத்திரைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறுவோர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | நான் வெஜ் சாப்பிட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! உடலுக்கு ஆபத்து!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ