Bigg Boss 8 Jacquline Salary Per Day : ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதில், முக்கிய போட்டியாளராக இருந்த ஜாக்குலின், எதிர்பாராத விதமாக போட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜாக்குலின்:
பிரபல தமிழ் தொகுப்பாளராக இருக்கும் ஜாக்குலின், பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் நுழைந்த கணம் முதலே முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். பல்வேறு டாஸ்குகளை ஒண்டி ஆளாக எதிர்கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அவர், தற்போது ஒரு டாச்கில் வெற்றி பெற முடியாமல் வெளியேறி இருக்கிறார். இது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வினையாக முடிந்த பணப்பெட்டி டாஸ்க்:
பிக்பாஸில் வழக்கமாக நிகழ்ச்சி முடிவதற்கு சில வாரங்கள் இருக்கும் சமயத்தில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும். இதில், முதலில் சில ஆயிரங்கள் முதல் ஆரம்பிக்கும் தொகை, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்து லட்சங்களை தொடும். எந்த போட்டியாளர் அந்த பணப்பெட்டியை எடுக்கிறாரோ, அவர் அந்த பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்து வெளியேறலாம். ஆனால், இந்த பிக்பாஸ் சீசனிலோ, வித்தியாசமாக கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. பணப்பெட்டி டாஸ்கில், கொஞ்சம் கொஞ்சமாக தொகை அதிகரிக்கப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ப அந்த பெட்டிக்கான தூரமும் அதிகரித்துக்கொண்டே வந்தது.
பிக்பாஸ் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்குள், போட்டியாளர் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு இல்லத்திற்குள் வந்துவிட வேண்டும் என்பதுதான் டாஸ்க் ஆக இருந்தது. அப்படி, பணப்பெட்டியை தூக்கொண்டு ஓடிய முத்துக்குமரன், ரயான், பவித்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர். சௌந்தர்யா பணப்பெட்டியை தூக்கொண்டு, அதை பாதி வழியிலேயே போட்டுவிட்டு வந்துவிட்டார். அதே போல ஜாக்குலினும் பணப்பெட்டியை தூக்கொண்டு ஓடினார். ஆனால், அவரால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த டாஸ்கை முடிக்க முடியாததால் எவிக்ட் ஆகியிருக்கிறார்.
ஜாக்குலினின் சம்பளம்:
ஜாக்குலின் உள்பட பிக்பாஸ் 8 இல்லத்தில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட சம்பள தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ‘இத்தனை’ ஆயிரம் என்ற வீதத்தில் அவர்களுக்கு கடைசியில் ஒரு தொகை வழங்கப்படும். இதில், ஜாக்குலினிற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, அவர் மொத்தம் 101 நாட்கள் பிக்பாஸ் 8 உள்ளத்திற்குள் இருந்துள்ளார். இதனால், இவருக்கு மொத்தமாக சுமார் ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது, பொதுவாக இணையத்தில் வலம் வரும் தகவல்தானே தவிர இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ரசிகர்கள் அதிருப்தி..
அனைத்து பிக்பாஸ் சீசன்களிலுமே, ஒரு சில போட்டியளர்கள் எவிக்ட் ஆகும் போது அதனை நியாயமற்ற எவிக்ஷன் என சிலர் கூறுவதுண்டு. அப்படி, கடைசியாக தீபக் வெளியேறிய போதும் பலர் கூறி வந்தனர். அதே போல, ஜாக்குலின் தற்போது வெளியேற்றப்பட்டிருக்கும் போதும், ரசிகர்கள் இணையத்தில் அதனை நியாயமற்றது என்று குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது, ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக முத்துக்குமரன் மட்டும் கடைசி ஆளாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
முத்துக்குமரனுடன் சேர்ந்து, ரயான், செளந்தர்யா, பவித்ரா, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் வின்னர் ஆகப்போவது என்பது குறித்துதான் ஊர் முழுக்க பேச்சாக இருக்கிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் ‘இவர்’தான்! முன்னாள் போட்டியாளர்கள் சொன்ன ஆள்!
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன அருண்-தீபக்! இருவரில் யாருக்கு சம்பளம் அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ