உடலுறவு மாரத்தான்! 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன்... யார் அந்த பெண்?

World Bizarre Latest News: ஆபாச பட மாடலான போனி ப்ளூ என்பவர், 12 மணிநேபத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 15, 2025, 06:18 PM IST
  • நலமுடன் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • இதனால் சருமம் ஆரோக்கியமானதாக அவர் கூறியுள்ளார்.
  • ஆனால், இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை.
உடலுறவு மாரத்தான்! 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன்... யார் அந்த பெண்? title=

World Bizarre Latest News In Tamil: OnlyFans மாடலாக அறியப்படும் போனி ப்ளூ, ஏற்கெனவே இருந்த சாதனை ஒன்றை முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது ஆபாச பட நடிகை லிசா ஸ்பார்க்ஸ் ஒரு நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதுதான் சாதனையாக இருந்த நிலையில் தற்போது இதனை தான் முறியடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, 12 மணிநேபத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். 

இந்த அனுபவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பகிர்ந்துகொண்டார். அதில்,"நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். படுக்கையறையில் ஒரு கடினமான நாளை கடந்தது போல் உணர்கிறேன். உண்மையாகவே அப்படி தான் இருந்தது. 3-4 மணி நேரம் இதே நிலை தொடர்ந்திருந்தால், நான் சிரமப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்," என்று கூறியிருந்தார். போனி ப்ளூ தனது மற்றொரு டிக்டாக் வீடியோவில், இந்த சமீபத்திய நாளுக்கு பிறகு, தனது சருமம் பொலிவாகி ஆரோக்கியமாகியிருப்பதாக தெரிவித்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bonnie Blue (@bonnie_blue_xox)

ஒருநாளில் 1000 பேர்...

ஆனால் போனி ப்ளூவின் இந்த பேச்சு மருத்துவ நிபுணர்களிடம் விமர்சனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக தொடர்ச்சியான உடலுறவு குறித்த சாத்தியக்கூறு மற்றும் அதில் இருக்கும் சுகாதாரம் சார்ந்த அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பினர். இருப்பினும், போனி ப்ளூ ஒரு நாளில் 1,000 மேலான ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக எண்களை துல்லியமாக கூறினார்.

மேலும் படிக்க | 158 பேருடன் உடலுறவு... அதுவும் 2 வாரங்களில்... ரகசியத்தை பகிர்ந்த ஆபாச மாடல் - கைக்கொடுக்கும் தாயார்!

எச்சரிக்கும் மருத்துவர்கள்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,"உடலுறவின் போது பல்வேறு தசைகள் மற்றும் இதய அமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகள் இருக்கும். எண்டோர்பின்கள் ஹார்மோன் வெளியீடும் உடலுறவின்போது அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன் உடல் வலி இருக்கும்போதும், அழுத்தத்தில் இருக்கும்போது சுரக்கும். 

அதாவது, இது மூளையில் சுரந்து, உங்களின் உடலில் இருக்கும் வலிகளை குறைத்து, அழுத்தத்தை நிவர்த்தி செய்து, மனநிலையை சீராக்கும். இப்படி உடலுறவால் இதய ஆரோக்கியம், மன நிம்மதி, மனிதர்களுடனான உணர்ச்சி ரீதியான பிணைப்பு ஆகியவை உண்டாகிறது. ஆனால், 24 மணிநேரமும் உடலுறவு மேற்கொள்வது என்பது உடல்நல ரீதியாகவும், மனநலன் ரீதியாகவும் பெரும் பிரச்னையாகும்" என்கின்றனர்.

சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனம்

சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற சாகசங்களுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனை ஒரு சாதனையாக எண்ணக்கூடாது என ஒரு சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து்ள்ளனர். முன்னதாக, போனி ப்ளூ தனது பல்வேறு கருத்துக்களால் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அதுவும் குறிப்பாக, கணவன்கள் தங்களின் மனைவிகளை ஏமாற்ற வேண்டும் என அவர் பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியது. கடந்த அக்டோபர் மாதம் 23 வயதான லில்லி பிலிப்ஸ் என்ற மாடல் ஒரு நாளுக்கு 100 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டிருந்த நிலையில் போனி ப்ளூ இத்தகைய சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

போனி ப்ளூ மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

25 வயதான போனி ப்ளூ, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷயர் கவுன்டியின் ஸ்டேபிள்ஃபோர்ட் நகரைச் சேர்ந்தவர் ஆவார். ஆபாச பட நடிகையாவதற்கு முன் மனித வளத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமும் ஆகிவிட்டது. இவர் வெப்கேம் மாடலாக உருவெடுத்த பின்னர், OnlyFans தளத்தில் இவருக்கு என ரசிகர்கள் குவிந்தனர். இதன்மூலம் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த இணையதளத்தின் வாயிலாக அவர் சம்பாதித்தார். OnlyFans தளத்தில் ஆபாச வீடியோவை பதிவேற்றுவது மூலம் மட்டும் தனக்கு ஒரு மாதத்திற்கு 750,000 பவுண்ட் வருமானம் வருவதாக கூறுகிறார். அதாவது இந்திய மதிப்பில் 7.97 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | உடலுறவு செய்ய முயற்சித்தவரை... ஓங்கி மிதித்த பசு - ஆணுறையுடன் உயிரிழந்த கிடந்த நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News