Avaniyapuram Jallikattu 2025, Prizes And Results: தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாடுபிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. காலை 6.30 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தனர்.
இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 500 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக 836 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. அதாவது, முதல் 10 சுற்றுகளிலும் சிறப்பாக காளைகளை பிடித்த சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், இறுதி சுற்றில் கலந்துகொண்டனர். இறுதிசுற்று முழுவதும் பரவலான மழைபெய்த நிலையிலும், ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: பரபரப்பான இறுதிச்சுற்று
போட்டியில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றி பெற்று பரிசுகளை அள்ளி சென்றது. இதேபோன்று மிரட்டிய காளைகளையும் கூட சில மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்து, அதனை அடக்கி பல்வேறு பரிசுகளையும் பெற்றுசென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் பார்வையாளர்கள் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: சிறந்த காளைகள் - என்ன பரிசுகள்?
போட்டியில் வி.கே.சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வீரர்களை நெருங்கவிடாமல் களமாடியது. இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக டிராக்டர் வாகனமும், மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசு ஆகிய பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த ஜி.ஆர். கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: சிறந்த மாடுபிடி வீரர்கள் - என்ன பரிசுகள்?
போட்டியின் போது திறம்பட விளையாடி 19 காளைகளை அடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திற்கு முதல் பரிசாக துணை முதலமைச்சர் சார்பில் நிசான் எலெக்ட்ரிக் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2 ஆவது மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | பொங்கல் முடிந்து நிம்மதியா வரலாம்; தூத்துக்குடி டூ தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: 46 பேர் காயம்... ஒருவர் உயிரிழப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 6.30 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியின்போது 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போட்டியின் முடிவில் சிறந்த 2 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகோப்பைகளும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.
போட்டியில் மாடு குத்தியதில், காவல்துறையினர் , செய்தியாளர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் , உள்ளிட்ட 46 பேர் காயமடைந்த நிலையில், 12 மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டியின் போது மாடுமுட்டியதில் விளாங்குடியை சேர்ந்த நவின்குமார் உயிரிழந்தார்.
மேலும் படிக்க | மாட்டு பொங்கலில் உங்கள் வாசலை அழகுபடுத்தும் எளிமையான கோலங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ