2025 Champions Trophy: அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஐசிசி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போட்டி நடைபெறுவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்து வருகின்றனர். ஏற்கனவே சில ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வில் ஐசிசி சேர்ந்த அதிகாரிகள், ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் பிட்ச் தயார் செய்பவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வீரர்களின் பாதுகாப்பு
மேலும் மைதானத்தில் வீரர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்த குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த முழு விவரங்களை பகிர்ந்துள்ளார். கூடுதலாக என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 19 அன்று சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் தொடங்குகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மூன்று முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 அன்று பங்களாதேஷ் vs நியூசிலாந்து, பிப்ரவரி 25 அன்று ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் vs வங்கதேசம் போட்டிகள் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் ஆய்வு
ஐசிசி குழு இதற்கு முன்பு கராச்சி மைதானத்தில் ஆய்வு செய்து இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ராவல்பிண்டியில் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் இன்னும் போட்டிகளை நடத்த தயார் ஆகவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அங்குள்ள மைதானத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி இன்னும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது போல காட்டுகிறது. ஐசிசி தரப்பில் இருந்து அனைத்து மைதானங்களும் ஜனவரி 25க்குள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. கடைசி நேரத்தில் அனைத்தும் சரியாக நடக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அனைத்து மைதானங்களும் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கு தேவையான சர்வதேச தரத்தை கொண்டுள்ளதா என்பதை ஐசிசி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சர்வதேச தரம், வீரர்களுக்கான வசதிகள், உள்கட்டமைப்பு, ஒளிபரப்புத் திறன்கள் மற்றும் ரசிகர்களுக்கான வழிகள் போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற உள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி நிகழ்வு என்பதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர் சிறப்பாக நடந்து முடியும் பட்சத்தில் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபாய் ஆகிய நான்கு இடங்களில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது. குழு Aவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் இடம் பெற்றுள்ளது. குழு Bயில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
மேலும் படிங்க: IND vs ENG: இனி இந்த வீரர்களுக்கு எப்போதும் டி20 அணியில் வாய்ப்பு இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ