Happy Birthday Rahul Dravid: இந்தியாவின் தடுப்புச்சுவர்.. 11 ஆண்டு கனவை நினைவாக்கிய நாயகன்

Happy Birthday Rahul Dravid: இந்தியாவின் தடுப்புச்சுவர் என அன்பாக அழைக்கப்படும் ராகுல் டிராவில் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்தியாவின் தடுப்புச்சுவர்(THE WALL) என அன்பாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இன்று தனது 52வது  பிறந்தநாளை  கொண்டாடுகிறார். இப்போதைய தலைமுறைகளை முன்னாள்  கிரிக்கெட்  வீரருடன்  ஒப்பிடுவது  வழக்கம். அடுத்த சச்சின் இவர் தான், அடுத்த  சேவாக்  இவர் தான்  எனக்  கூறுவதுண்டு. ஆனால் இன்று வரை அடுத்த டிராவிட் இவர் தான் என ஒருவரை கூட கூறமுடியவில்லை. அந்த அளவிற்கு  பேட்டிங்கில்  தனது  தனித்துவத்தைக்  காட்டியவர் ராகுல் டிராவிட். ஏன் சமீபத்தில் நடந்து முடிந்த  பார்டர்  கவாஸ்கர் தொடரில் கூட இந்தியாவில்  கிரீஸில்  நின்று டிராவிட் போல்  விக்கெட்டை  காத்து  ரன்  சேர்க்க யாரும் இல்லை என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன.  டெஸ்ட்  கிரிக்கெட்டில் அதிக நேரம்  கிரீஸில்  நின்ற வீரர், அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என ஏராளமான சாதனைகளை ராகுல் டிராவிட் படைத்துள்ளார். அப்படி இவர் செய்த சில சாதனைகளை  இங்குப்  பார்க்கலாம்.

1 /8

டெஸ்ட் கிரிக்கெட்டில் 31,258 பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரராக ராகுல் டிராவிட் திகழ்ந்து வருகிறார். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவதால் இச்சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது. 

2 /8

டெஸ்ட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒருவரால் 210 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார் ராகுல் டிராவிட். 

3 /8

டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக ராகுல் டிராவிட் 44,152 நிமிடங்கள் கிரீஸில் நின்று சாதனை படைத்துள்ளார். பல உலக தரம் வாய்ந்த சிறப்பு பந்து வீச்சாளர்களை தனது பேட்டிங்கால் தனற வைத்தவர். 

4 /8

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது இணையுடன் அதிக சத பார்ட்னர்ஷிப்பை நிகழ்த்தியவர். அந்த வகையில் மொத்தமாக 88 சத பார்ட்னர்ஷிப்பை நிகழ்த்தி ராகுல் டிராவிட் சாதனை படைத்துள்ளார். 

5 /8

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 முறை 300க்கும் மேற்பட்ட ஸ்டாண்ட்ஸ்களை எடுத்துள்ளார். இதில் டெண்டுல்கர் மற்றும் லட்சுமணன் போன்ற ஜாம்பவான்களுடன் பார்ட்னர்ஷிப்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 2 முறை 300க்கும் மேற்பட்ட ஸ்டாண்ட்ஸ்களை எட்டியுள்ளார். 

6 /8

டிராவிட் தொடர்ச்சியாக 120 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்திய அணி விக்கெட்களை இழந்து அழுத்தத்திலிருந்தபோதிலும் இவரது பொறுமை இவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. 

7 /8

1999ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டிராட் - சச்சின் டெண்டுல்கர் இணைந்து 331 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தனர். 

8 /8

டெஸ்ட் விளையாடும் ஒவ்வொரு நாட்டிலும் சதம் அடித்த வீரர்களில் டிராவிட்டும் ஒருவர். இது அவரது பல்வகை திறன் மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளில் தன்னை தகவமைப்புத் திறன் காட்டுகிறது.