Union Budget 2025: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். பலதரப்பட்ட, பல துறைகளை சார்ந்த மக்களுக்கு பட்ஜெட்டில் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல துறைகளின் பிரதிநிதிகள் நிதி அமைச்சகத்திடம் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
Budget 2025 Expectations
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Central Government Employees, Pensioners
இந்த பட்ஜெட் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் பூர்த்தி செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சில முக்கிய கோரிக்கைகள் நிதி அமைச்சகத்தின் சார்பில் வைக்கப்படுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பார்க்கலாம்.
Section 80C Limit: 80C பிரிவின் வரம்பை அதிகரிக்க வேண்டும்
நாட்டின் சாதாரண குடிமக்கள் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரை அனைவரும், இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் 80C வரம்பை அதிகரிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது, 80C வரம்பு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும், இது அரசின் வரி வருமானத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதை அரசு அதிகரிக்குமா இல்லையா என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
8th Pay commission: 8வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும்
2025 பட்ஜெட்டில் மிக முக்கியமான எதிர்பார்ப்பு 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பாக உள்ளது. இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். பொதுவாக ஊதியக்குழுக்கள் 10 ஆண்டுக்கு ஒரு முறை அமலுக்கு வருகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த கணக்கீட்டில் பார்த்தால், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். அதற்கு உடனடியாக அதற்கான அறிவிப்பு வர வேண்டும். 7வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், இப்போது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த புதிய கமிஷன் தேவை என்றும் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தேசிய செயலாளர் தெரிவித்தார்.
Old Pension System: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை
பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் பெறப்படும் ஓய்வூதியம் குறித்து தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோருகின்றனர்.
EPFO Minimum Pension: EPFO குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை
EPFO-வின் கீழ் EPS-95 ஓய்வூதியத்தை மாதத்திற்கு தற்போதுள்ள ரூ.1,000 -இலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை உள்ளது. மேலும் இதை வேரியபிள் அகவிலைப்படியுடன் (VDA) இணைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இது தவிர, ஓய்வூதியதாரர்கள் நிவாரணம் பெறும் வகையில் ஓய்வூதிய வருமான வரியை இலவசமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
18 Months DA Arrears: 18 மாத டிஏ அரியர்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்டில், 18 மாத நிலுவைத் தொகை செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரசு இது குறித்து இதுவரை எதுவும் தெளிவாக கூறாததால், இதற்கான நம்பிக்கை குறைவாகவே உள்ளது.
Nirmala Sitharaman: ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிதியமைச்சர் நிறைவேற்றுவாரா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல வித எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் நேர்மறையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று தொழிற்சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அது அவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டில் 8வது சம்பளக் குழு அறிவிக்கப்படுமா, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள சுலபமான 4 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ