How Did Actor Ajith Kumar Lost Weight? தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், தற்போது கடந்து சில மாதங்களாக சினிமாவை விட தனக்கு பிடித்த கார் ரேஸிலும், பைக் டூரிலும் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் மொத்தமாக உடல் எடை இளைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார்.
கார் ரேஸில் அஜித் குமார்:
நடிகர் அஜித் குமாருக்கு, சினிமாவை தாண்டி பிடித்த சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கார் ரேஸ். முன்னர், தொடர்ந்து பைக் ஓட்டி வந்த இவர், பல விபத்துகள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அதனை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தார். இருப்பினும், சமீபத்தில் தனக்கு பிடித்த நகரங்களுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொண்டு வந்தார்.
அஜித் நடிப்பில் உருவான இரண்டு படங்களும் இன்னும் சில மாதங்களில் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் துபாயில் நடக்கும் கார் பந்தையத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
உடல் மெலிந்தார்:
நடிகர் அஜித், இளமையாக இருந்த காலத்திற்கு படத்திற்கு என்று தேவைப்பட்டால் உடல் எடை குறைத்து அல்லது ஏற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளில் நடித்த படங்களில் உடல் பூசினாற் போல இருந்த அவர், சமீபத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்தார். இதை பார்த்து, அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி, சினிமா செய்திகளை ஃபாலோ செய்து வரும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அஜித் கார் ரேஸிற்காக உடல் எடை குறைந்ததாக கூறப்பட்டது. ஒரு சிலர், இந்த மாற்றம் அஜித்திற்கு எடுப்பாக உள்ளது எனக்கூற, இன்னும் சிலர் அவர் இன்னும் வயதானது பாேல காட்சியளிப்பதாக தெரிவித்தனர்.
எடை குறைந்தது எப்படி?
நடிகர் அஜித் குமார் 24 H கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக எடை குறைக்க என்ன செய்தார் என்பது குறித்து ‘வலைப்பேச்சு’ பிஸ்மி பேசியிருக்கிறார். எடையை குறைப்பதற்காக மூன்று மாதங்களாக உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் வெந்நீர் மட்டும் குடித்து வந்ததாக கூறியிருக்கிறார். மேலும், உடலுக்கு வலு வேண்டும் என்பதற்காக புரோட்டின் பவுடர்களை குடித்து வந்ததாகவும், வைட்டமின் மாத்திரைகளை உட்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால்தான் அஜித்தால் இவ்வளவு விரைவாக எடையை குறைக்க முடிந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இது, இவர் கூறிய தகவல்தானே தவிர அஜித்தோ, அவரை சார்ந்தவர்களோ தானாக முன்வந்து இது குறித்து எதுவுமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
பிஸ்மி, அஜித் குறித்து இப்படியொரு விஷயத்தை பேசியதை அடுத்து, இது குறித்து சில மருத்துவர்களிடமும் சில ஊடகங்கள் பேட்டி எடுத்தன. இது குறித்து பேசிய அவர்கள் எப்போதும் பாலன்ஸ்ட் ஆக டயட் வைத்துக்கொண்டு அதை பின்பற்றி எடையை குறைப்பதுதான் சரியானது என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், வெறும் வெந்நீரையும் புரோட்டீன் பவுடரையும் வைத்து எடை குறைப்பது ஆரோக்கியமற்றதாக இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ரசிகர்கள், இதை பார்த்து தானும் இப்படி எடை குறைய வேண்டும் என்ற முயற்சியில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகாேள் விடுத்திருக்கிறார்.
2 படங்களும் ரிலீஸிற்கு ரெடி!
அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே இன்னும் சில மாதங்களில் வெளியாக ரெடியாக இருக்கின்றன. பொங்கல் அன்று வெளியாக இருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதை அடுத்து, இந்த ஜனவரி மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்
மேலும் படிக்க | அஜித் மகளின் பிறந்தநாள் போட்டோஸ்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ