Toxic Work Environment : ஒரு சில வேலை பார்க்கும் இடங்கள், அலுவலகத்திற்கு போகும் உணர்வை விட, ஏதோ போர்களத்திற்கு போகும் உணர்வை கொடுக்கும். அலுவலக அரசியல், கிசுகிசு, நெகடிவாக பேசுவது என பல விஷயங்கள் வேலை செய்யும் இடத்தில் நடக்கும். இது போன்ற இடங்களில் வேலை செய்யும் போது நமது எனர்ஜிக்கள் அனைத்தும் உடலை விட்டு நீங்குவது போல இருக்கும். இதனால் மன அமைதி இல்லாமல் இருப்போம். இதை சரிசெய்ய, சில ட்ரிக்ஸ் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது:
டாக்ஸிக் ஆன வேலை இடத்தில், நம்பிக்கை என்பது ஒருவர் மீது இன்னொருவருக்கு தானாக வர வேண்டும். ஒருவர், பார்ப்பதற்கு நண்பர் போல இருந்தாலும், பல சமயங்களில் அவர் நமக்கு எதிரியாக திரும்பி விடுவார். அவரை நம்பி சில விஷயங்களை நாம் சொல்லப்போக, அது நமக்கே எதிராக திரும்பும். எனவே, உங்களை குறித்த விஷயங்களை நீங்கள் உங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்வது நல்லது.
பேசுவதில் கவனம்:
ஒரு சிலர், நாம் ஒரு அர்த்தத்தில் பேசினால் அதனை வேறு ஒரு அர்த்தமாக மாற்றி திரித்து வேறொருவரிடத்தில் கூறுவர். அதனால், நீங்கள் கேஷுவலாக ஏதேனும் பேசினால் கூட அதில் கவனம் கொள்வது மிகவும் அவசியம். வேலை செய்யும் நேரத்தில் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, கவனச்சிதறல் ஏற்படுத்தும் விஷயங்களிடம் இருந்து தள்ளியே இருங்கள்.
கிசுகிசு:
டாக்ஸிக் ஆன வேலை இடத்தில், அளவுக்கு அதிகமான கிசுகிசுக்கள் இருக்கும். இது, பிறரை வீழ்த்த ஒரு சிலரால் வைக்கப்படும் பொறி. இதில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால், வேலை பார்க்கும் அனைவருக்குமே நல்லது. இப்படி கிசுகிசு பேசினால், உங்களது மரியாதை கெட்டுப்போவது மட்டுமன்றி, தேவையற்ற வம்புகளையும் விலைக்கு வாங்க நேரிடலாம். எனவே, மன அமைதியுடன் வேலை பார்க்க, அமைதியாக வேலையை மட்டும் பார்ப்பது நல்லது.
ஆலோசனை கூறுவதை நிறுத்துங்கள்:
ஏதேனும் ஒரு விஷயத்தை வைத்து பிறரிடம் குறை கூறுபவர்கள், தான் கூறுவதை காது கொடுத்து கேட்கும் ஒருவரிடத்தில்தான் சென்று அனைத்தையும் கூறுவார்கள். பிறரை புரிந்து கொள்ளும் திறன் இருப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களது பிரச்சனையில் நீங்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம். இது, உங்கள் உணர்ச்சிகளை மொத்தமாக விழுங்கிவிட வாய்ப்புள்ளது. எனவே, இப்படி யாரேனும் பேச வந்தால் நாசூக்காக அவர்களை விட்டு விலகுவது நல்லது.
அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்:
பல நேரங்களில், “நாம் வேலை செய்யும் இடம் ஆரோக்கியமானதுதானா, இல்லையா” என்றே பலருக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரே மாதிரியான விஷயங்களை செய்கிறீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு சிலர் ஒரே மாதிரியான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் வேறு வேலையை பார்க்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் அலுவலகத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறீர்களோ, அதனை ஒரு லிஸ்ட் போட்டு, “இதிலிருந்து தப்பிப்பது எப்படி?” என்று யோசிக்க வேண்டும். கூடவே, உங்கள் மன நலன்தான் உங்களுக்கு முக்கியம் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | டாக்ஸிக் காதலில் இருந்து பிரிவது எப்படி? 8 வழிகளை பின்பற்றுங்கள்..
மேலும் படிக்க | உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ