Solar System, Astronomical Phenomenon 2025: ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் காட்சி அளிக்கும் வானியல் சார்ந்த அரிய நிகழ்வை வரும் 28 ஆம் தேதி முதல் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்திருக்கிறது . இதே போன்று ஏழு கிரக அணிவகுப்பு மீண்டும் 2040 ஆம் ஆண்டில் தான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றும்போது பூமியிலிருந்து நாம் பார்க்கும் பார்வை கோணம் அவ்வப்போது ஒரே திசையில் காட்சி அளிக்கும்.
அப்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஏழு கிரகங்கள் அணிவகுப்பு வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கிரக அணிவகுப்பு என்பது பல கிரகங்கள் ஒரே நேரத்தில் சூரியனின் ஒரு பக்கத்தில் கூடும்போது ஏற்படும் நிகழ்வாகும்.
இந்த கிரக அணிவகுப்பு பிப்ரவரி 28 அன்று தொடங்கினாலும், இந்தியாவில் உள்ளவர்கள் மார்ச் மூன்றாம் தேதி முதல் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட்போன்களில் வானியல் தொடர்பாக நிறைய செயலிகள் வந்துவிட்ட நிலையில், அதன் மூலம் கிரகங்களின் நிலைகளை ஆர்வலர்கள் இன்றி தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விண்வெளி ஆர்வலர் கழகம் உள்ளிட்டவை இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இந்தியாவிலிருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம் எனக் கூறும் அறிவியல் ஆர்வலர்கள், இதே போன்று ஏழு கிரக அணிவகுப்பு 2040 இல் தான் பார்க்க முடியும் என தெரிவிக்கிறார்கள்.
மேலும் படிக்க - ஏலியன்கள் இருப்பது உண்மை தான்... ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!
மேலும் படிக்க - எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... வாய் திறக்குமா நாசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ