E-Shram Card Pension Yojana: பல்வேறு தரப்பு மக்களுக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. உழைக்கும் வர்க்க மக்களுக்காக இ-ஷ்ரம் கார்டு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதன் கீழ், தொழிலாளர் அட்டை வைத்திருப்பவர்கள் 60 வயதை எட்டும்போது, அரசாங்கம் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த வழியில் அரசாங்கம் உழைக்கும் வர்க்க மக்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் உதவி நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. 60 வயதிற்குப் பிறகு எந்த ஏழையும் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இ-ஷ்ரம் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுகிறார்கள்.
இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்காக அரசாங்கம் இ-ஷ்ரம் அட்டை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் அட்டையைப் பெற்ற பிறகு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். ஒரு தொழிலாளி 60 வயதை எட்டும்போது, அரசாங்கம் அவருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்குவது மிகப்பெரிய உதவியாக பார்க்கப்படுகிறது.
Monthly Pension: மாத ஓய்வூதியமாக ரூ.3,000
இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் உதவி கிடைக்கிறது. இந்த வழியில், வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள், வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாமல் நிம்மதியாய் வாழ்கிறார்கள். வயதானவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களையும் மருந்துகளையும் இந்த தொகை கொண்டு எளிதாக வாங்க முடியும்.
இ ஷ்ரம் கார்டுக்கான தகுதி என்ன
- இந்தியாவின் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமே இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
- தொழிலாளியின் வயது 16 வயது முதல் 59 -க்குள் இருக்க வேண்டும்.
- தொழிலாளி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவில் இருக்க வேண்டும்.
இ-ஷ்ரம் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்
- பான் கார்டு
- ஆதார் அட்டை
- செயலில் உள்ள மொபைல் எண்
- வங்கி கணக்கு பாஸ்புக்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- முகவரிச் சான்று
இ ஷ்ராம் கார்டு ஓய்வூதியத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- இ-ஷ்ரம் கார்டு ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் அதன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில், நீங்கள் பதிவு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
- உங்கள் ஆதார் அட்டை எண் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- உங்கள் மொபைல் போனுக்கு OTP வரும்.
- அதை வெரிஃபை செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சரியாக உள்ளிட வேண்டும்.
- மீதமுள்ள தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு, நீங்கள் சப்மிட் பொத்தானை அழுத்த வேண்டும்.
- இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும்.
- அதை உள்ளிட்ட பிறகு சரிபார்ப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.
- இறுதியாக உங்கள் இ-ஷ்ரம் கார்டு இங்கே உருவாக்கப்படும்.
- கார்ட் உருவான பிறகு, அதை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க | ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்திற்கு ₹8500 கோடி... ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமல்
மேலும் படிக்க | உங்கள் குழந்தை பெயரில் SIP முதலீடு தொடங்குவது எப்படி... சில முக்கிய விபரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ