Planet Transit in March 2025: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மார்ச் மாதம் நடக்கும் கிரகப் பெயர்ச்சியால் மிதுனம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும், தொழிலில் புதிய முன்னேற்றமும் உண்டாகும்.
மார்ச் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட பல கிரகங்கள் பெயர்ச்சிகின்றன. மாதத் தொடக்கத்தில் மீனத்தில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி அடைகிறார். அதே சமயம் இம்மாதம் மார்ச் 15-ம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமிக்கும்.
சனி பெயர்ச்சி 2025: மார்ச் மாதத்தில் நடைபெறும் மிக முக்கிய பெயர்ச்சியான சனி பெயர்ச்சியினால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு,மீன ராசியில் சூரியன் - சனி சேர்க்கை நடக்கப் போகிறது. மார்ச் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு செல்லும் நிலையில்,, சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி பெயர்ச்சியாவதால், இரு முக்கிய கிரகங்களும் இணைகின்றன.
மார்ச் மாத பலன்கள்: சனி, சூரியன் மட்டுமல்லாது சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியும், புதனின் அஸ்மனமும் நடைபெற உள்ள நிலையில், இந்த கிரகங்களின் மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். மார்ச் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ட் மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். செல்வாக்கும் வீரமும் அதிகரிக்கும். உங்கள் எல்லா முடிவுகளையும் முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வேலையை மாற்றும் முயற்சியில் வெற்றி பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதயாங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும், வெற்றியை அடைய அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்களின் தொழில் நுட்ப அறிவால் பயனடைவீர்கள். வேலை செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சாதகமான சூழ்நிலை இருக்கும். உங்களுக்கு லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்து வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு மார்ட் மாதம் பணியிடத்தில் முன்னேற்றத்தையும் மாற்றங்களையும் கொண்டு வரும். உங்கள் வேலையில், தொழிலில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இது உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும். உங்கள் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் பல சிறப்பு வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் நிறைய முன்னேற்றம் காண்பீர்கள். இருப்பினும், இந்த மாதம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கும் திருமண வாய்ப்புகள் உண்டு. வேலை செய்பவர்களுக்கு வருமான உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் உங்கள் முதலாளி மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.