கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி

Kettimelam Today's Episode Update: மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ் என்ன? எஸ்கேப்பான வெற்றி! கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2025, 09:28 AM IST
  • கெட்டி மேளம்: இன்றைய எபிசோட்.
  • வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கும் லட்சுமி, சிவராமன்
  • தியாவை நினைத்து வருத்தப்படும் மோனிகா
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.

கெட்டி மேளம் : இன்றைய எபிசோட் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியிடம் பேச துளசி நீங்க ஆசைப்பட்ட பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கும் லட்சுமி, சிவராமன்

அதாவது, மகேஷ் பத்திரிகையுடன் வீட்டிற்கு வந்து முதல் பத்திரிகையை கொடுத்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். இதனையடுத்து லட்சுமி சிவராமன் ஆகியோர் ரகுராம் மற்றும் கேசவனுடன் வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கின்றனர். 

எம். எல்.ஏ தனது மூத்த மகனையும் மருமகளையும் அறிமுகம் செய்து வைக்கிறான், என் இரண்டாவது பையன் வெற்றி இப்போ வந்துடுவான் என்று சொல்ல வெற்றியும் வீட்டிற்கு வருகிறான். வெளியில் கேசவன் வண்டியை பார்த்த அவன் வெளியே கிளம்பி சென்று விடுகிறான். 

அடுத்து கோவிலுக்கு வந்த லட்சுமி அங்கு வெற்றியை சந்திக்கிறாள். வெற்றி லட்சுமியை வீட்டில் டிராப் செய்ய லட்சுமி அஞ்சலியின் கல்யாண பத்திரிகையை கொடுத்து அழைக்க வெற்றி அக்கா இது நம்ம வீட்டு கல்யாணம், கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்கிறான். 

அதனை தொடர்ந்து மகேஷ் மீண்டும் வீட்டிற்கு வர காரை பார்த்த லக்ஷ்மிக்கு ஸ்ரீகாந்தை நியாபகம் வர காரை பயன்படுத்த வேண்டாம் என்று அட்வைஸ் கொடுக்க மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து காரணம் கேட்க துளசி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். 

தியாவை நினைத்து வருத்தப்படும் மோனிகா

இங்கே மோனிகா தியாவை நினைத்து வருத்தப்பட ஜெகன் மற்றும் அவனது அம்மா தியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஏமாத்திடீங்களே தனுஷ்! நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: திரை விமர்சனம்..

மேலும் படிக்க | ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய ED... பின்னணியில் எந்திரன் படம் - என்ன மேட்டர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News