Did Actor Rajinikanth Said No To Mari Selvaraj : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அனைவராலும் அன்போடு கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.அண்ணாத்த, தர்பார் என வரிசையாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்தார் ரஜினிகாந்த். அதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொஞ்சம் டல்லாகினர். அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகளவில் 750 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே ஜெயிலர் கொடுத்த வெற்றியை அடுத்து நடித்த வேட்டையனிலும் அவர் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருந்த வேட்டையன் சுமாரான வரவேற்பையே பெற்றது.
கூலி திரைப்படம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது கூலி திரைப்படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் அந்தப் படத்தில் அவருடன் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் முழு மூச்சாக உழைத்துவருகிறார். இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜுக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. எனவே அதற்கும் சேர்த்து இதில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவுடன் கடந்த மாதம் வெளியானது. ஜெயிலர் 2வின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துவிட்டது. அதில் ரஜினியின் மாஸ் என்ட்ரியும், நெல்சனின் மேக்கிங்கும் அசரடித்தது. கண்டிப்பாக முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஜெயிலர் 2வை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.இதற்கிடையே சூப்பர் ஸ்டார் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நோ சொன்ன ரஜினி?
தற்போதைய இயக்குநர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் மாரி செல்வராஜ் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும்; ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்துவிட்டதாகவும்; அவரது இயக்கத்தில் நடித்தால் தேவையில்லாத சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு; அதனால் எதற்கு வம்பு என நினைத்து சூப்பர் ஸ்டார் ஒதுங்கிவிட்டதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் காலா கபாலி போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகள் உள்ள திரைப்படங்களை நடித்த ரஜினி காந்த் மாரி செல்வராஜ் படத்தை இப்படி ஒதுக்கலாமா என்ற கேள்வியும் வலுத்துள்ளது. இது, திரை வட்டாரங்களில் மட்டும் வைரலாகும் தகவலே அன்றி, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவர்தான்!! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..
மேலும் படிக்க | மாரி செல்வராஜின் உண்மையான முகம் குறித்து கூறிய பிரபல நடிகர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ