96 Movie First Hero Choice Actor : 2018 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படங்களுள் ஒன்று, 96. இந்த திரைப்படத்தை சி.பிரேம்குமார் இயக்கியிருந்தார். பலரது நிறைவேறாத காதல் நெஞ்சங்களை தட்டி எழுப்பும் வகையிலான கதையை கொண்டிருந்தது, 96 திரைப்படம். இந்த படத்தில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். அவரது முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இந்த படம், தமிழகத்தை தாண்டி இந்திய அளவை பலரது மனங்களை தொட்ட படமாக மாறியது.
முதலில் நடிக்க இருந்த ஹீரோ:
96 படத்தில் ஹீரோவின் பெயர் ராம். இந்த கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தனது பள்ளி காதலியை மறக்க முடியாத நடுத்தர வயது நபராக பலரையும் கவர்ந்தார். இந்த கதாப்பாத்திரத்தை இவரை விட வேறு யாரும் சரியாக செய்து விட முடியாது என படம் பார்த்த பலர் கூறினர். இந்த நிலையில், இந்த கதையை விஜய் சேதுபதிக்காக தான் முதலில் எழுதவில்லை என்ற தகவலை இப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
யாருக்காக எழுதப்பட்ட படம் தெரியுமா?
96 திரைப்படத்தை பிரேம் குமார் எந்த ஹீரோவை மனதில் வைத்து எழுதினேன் என்பதை கூறியிருக்கிறார். அவர் அப்படி 96 ராமாக உருவகப்படுத்தி கொண்டது, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனைத்தான். 49 வயதாகும் அபிஷே பச்சன் பாலிவுட்டின் பெரிய நடிகரான அமிதாப் பச்சனின் மகனாவார். அது மட்டுமல்ல, நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவரான இவர் இதுவரை இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
96 படத்தில் நடிக்க வைக்க அபிஷேக் பச்சனை முடிவு செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார் பிரேம் குமார். இந்த படம் மூலம் அவரை தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என நினைத்த அவர், அவரை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என தெரியாததால் அந்த திட்டத்தை அப்படியே கை விட்டுவிட்டு விஜய் சேதுபதியை கேட்டிருக்கிறார். அவரும் இதில் நடிக்க சம்மதித்து-படமும் பெரிய அளவில் ஹிட் ஆகி விட்டது.
பல மொழிகளில் உருவான 96:
96 திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. தெலுங்கில் இந்த படம் ஜானு என்ற பெயரில் உருவானது. மலையாளத்திலும் 99 என்ற பெயரில் இப்படம் உருவானது. தெலுங்கில் த்ரிஷா கதாப்பத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார், விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஷர்வானந்த் நடித்திருந்தார். கன்னடத்தில் ஹீரோயினாக பாவனா நடிக்க, ஹீரோவாக கணேஷ் நடித்திருந்தார். அந்த இரு மொழிகளிலும் கூட படம் பெரிய ஹிட் அடித்தது.
இரண்டாம் பாகம் வருமா?
பிரேம் குமார், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தான் 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறினார். இதில், சில மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிவித்த அவர், இதுவும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என கூறினார். இதிலாவது ராமும் ஜானுவும் ஒன்றாக சேருவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்த மேலும் பல தகவல்களுக்காக அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். கடைசியாக பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்! ‘இந்த’ பிரபல ஹீரோவா?
மேலும் படிக்க | துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ