எமோஷனல் ஹாரர் த்ரில்லர் 'எமகாதகி' படத்தின் ரிலீஸ் தேதி! எப்போது தெரியுமா?

Yamakaathaghi Movie Release Date : முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 16, 2025, 09:18 PM IST
  • நரேந்திர பிரசாத் நடித்திருக்கும் யமகாதகி படம்!
  • ரிலீஸ் தேதி வெளியீடு..
  • எப்போது திரையரங்குகளில் பார்க்கலாம்?
எமோஷனல் ஹாரர் த்ரில்லர் 'எமகாதகி' படத்தின் ரிலீஸ் தேதி! எப்போது தெரியுமா? title=

Yamakaathaghi Movie Release Date : சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 

டீசர் வெளியீடு!

டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா  மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ்  ரூபா கொடவாயூர்  முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி”  கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  

ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக  இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம்,  படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

“எமகாதகி” படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும்  மார்ச் 7 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது. டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா  மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ்  ரூபா கொடவாயூர்  முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி”  கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  

ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக  இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் நடிக்கின்றனர்?

இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம்,  படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  “எமகாதகி” படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?

மேலும் படிக்க | ஜீவா நடித்துள்ள அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News