மீனத்தில் புதன் - சுக்கிரன்: இந்த 5 ராசிகளுக்கு அன்லிமிடெட் மகிழ்ச்சி காத்திருக்கு!

Mercury - Venus In Pisces: சிறந்த அதிர்ஷ்ட ராசிகள் இந்த யோகத்தின் கீழ் செல்வந்தர்களாக மாறுகிறார்கள். இந்த யோகம் வழியாக அவர்கள் தங்களின் வாழ்க்கையைப் புதுப்பித்து, ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்கையை அனுபவிக்கின்றனர். லட்சுமி நாராயண யோகத்தின் பலனாக, பண்பாட்டு முன்னேற்றம், தொழிலில் வெற்றி, மன அமைதியான வாழ்க்கை ஆகியவை அவர்களது வாழ்க்கையில் பெரிதும் பரவுகின்றன.

Lakshmi Narayana Yoga: லட்சுமி நாராயண யோகம்என்பது தமிழ்ச் சாஸ்திரங்களின் முக்கியமான யோகங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த யோகம் தனியான முறையில் வெற்றியை, செல்வம் மற்றும் வளங்களை அளிக்கின்றது. இந்த யோகம் உருவாகும் போது, அதிர்ஷ்ட ராசிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த ராசிகள் இந்நேரத்தில் பணம், பொருள் மற்றும் வாய்ப்புகளை மிக எளிதாகப் பெற முடியும். அவர்கள் செயல்களில் மேம்பாடு, எதிர்காலத்திற்குச் சிறந்த திட்டங்கள், நம்பகத்தன்மை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றன.

1 /8

கும்பம்(Aquarius): புதன் பெயர்ச்சியால் இவர்களுக்கு நிதி ரீதியாக நன்மை கிடைக்கும். நிதி ஆதாயம் அல்லது பண வரவு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். வாழ்க்கையில் வெற்றிக்கான வழி உங்கள் கையில் உள்ளது. கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும். துணையுடன் மரியாதையுடன் நடப்பது நல்லது.   

2 /8

மகரம்(Capricorn): புதன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்குப் பல நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கிறது. வேலையில் பதவி உயர்வு அல்லது மதிப்புக்கூட்டும். மாணவர்கள் சில சிரமங்களைச் சந்திக்கலாம். குடும்ப விஷயங்களில் பொறுமையாகவும், புரிதலுடனும் செயல்படுவது மிகவும் அவசியம்.

3 /8

கன்னி(Virgin) ராசி: தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத பாராட்டுகள் கிடைக்கலாம் அல்லது மதிப்பு அதிகரிக்கலாம். நீங்கள் கடினமான உழைப்பைக் கொடுப்பது நல்லது. கடன் வாங்கிய பணம் அல்லது கொடுத்த பணம் கிடைக்கலாம். புது தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நல்ல நேரமாக இருக்கிறது.

4 /8

மிதுனம்(Gemini): இந்த புதன் சஞ்சாரத்தால் இவர்களுக்கு மங்களகரமான யோகம் அமையவிருக்கிறது. தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். உடல் நலம் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்.

5 /8

மிதுன(Gemini) ராசிக்காரர்களின் கடின உழைப்பு என்றும் வெற்றியைக் கொடுக்கும். புதியப் பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கடினமான சூழ் நிலையைத் தீர்ப்பதற்கு உரிய நேரமாக இருக்கிறது.

6 /8

ரிஷபம்(Taurus) ராசி: மீன ராசியில் புதனின் சஞ்சாரம் இருப்பதால் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் வலுவாக அமையும். புது வருமான ஆதாயங்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் மதிப்பு அதிகரிக்கும்.   

7 /8

இந்த ராசிக்காரர்களின்(Taurus) வாழ்க்கையில் அமைதியா சூழல் நிலவும். இதுவரை சந்தித்த சிக்கல்கள் எல்லாம் சுமுகமாக முடியும். உடல் நலத்தில் ஆரோக்கியம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் இலாபம் பெருகும்.

8 /8

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)