ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

MK Stalin News: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 22, 2025, 03:18 PM IST
  • எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல - ஸ்டாலின்
  • புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது - ஸ்டாலின்
  • தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை - ஸ்டாலின்
ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி title=

MK Stalin Latest News Updates: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.

கடலூரில் நடைபெற்ற பெற்றோர்களை கொண்டாடும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 22) கலந்துகொண்டார். இந்த விழாவில் பெற்றோர் - ஆசிரியர்களுக்கான பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். Anaithu Palli Parents Teachers Association - APPA செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

MK Stalin: 'ரூ.2,152 கோடி நிதியை தர மறுக்கிறது'

பள்ளிக் கல்வி துறையில் தமிழக அரசு உலக அளவில் சாதனைகளை செய்து வருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இந்தியாவிலேயே 2ஆம் இடம்பெற்றுள்ளது. இந்தாண்டு பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.44 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறையில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு நம்மை பாராட்டினாலும், மறுபுறம் பள்ளிக் கல்வி துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை தர மறுக்கின்றனர்.

MK Stalin: இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை

இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு செலவு செய்யவேண்டிய தொகை ஆகும். புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்க மறுப்பதால் நிதியை தர மறுக்கின்றனர். புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை. இது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து.

எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரிகள் இல்லை. எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம். இந்தியை திணிப்பதால் மட்டும் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இந்த புதிய கல்வி கொள்கை மாணவர்களை பள்ளியில் இருந்து துரத்தும் கொள்கை, சமூக நீதிக்கு எதிரியான கொள்கை.

MK Stalin: புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?

இந்த கல்வி கொள்கையில் 3, 5, 8 ஆம் வகுப்பில் பொது தேர்வு, 9 முதல் 12 வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விரும்பிய கல்லூரியில் சேர முடியாது, அவர்கள் பொது நுழைவு தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வும் தேசிய அளவில் நடைபெறும். இந்த கல்வி கொள்கையில் 6ஆம் வகுப்பு முதல் குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பார்க்கின்றனர்.

இதை பார்த்து தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறோம். ரூ.2152 கோடி அல்ல 10 ஆயிரம் கோடி கிடைத்தாலும் இந்த கொள்கையை ஏற்க மாட்டோம். ரூ.2,152 கோடிக்கு கையெழுத்து போட்டால் 100 ஆண்டு பின்னோக்கி செல்வோம். இதை ஒருபோதும் செய்ய மாட்டேன். நான் எந்த மொழிக்கும் எதிரி அல்ல.

MK Stalin: 'எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல'

யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி படிக்கலாம். இந்தியை திணிக்க நினைத்தால் தமிழர் என்ற ஓர் இனம் உண்டு, அவருக்கு தனி குணம் உண்டு. ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார், பல மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்கின்றன, ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏற்றுகொள்ளவில்லை என... ஏனென்றால் இது தமிழ்நாடு.

ஒரு இனத்தை அழிக்க மொழி கலாச்சாரத்தை அளித்தால் போதும் என்று துணை ஜனாதிபதி சொல்கிறார். இந்தியாவில் 72 ஆண்டில் 62 மொழி அழைத்துள்ளது. ஹிந்தி உள்ள மாநிலங்களில் 25 மொழிகள் அழிந்துள்ளன. மத்திய அரசு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1488 கோடி ஒதுக்கி உள்ளது. அந்த மொழி பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டுமே. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ரூ.76 கோடி ஒதுக்குகின்றனர். மத்திய அரசு பள்ளிக் கல்வி துறை நிதியை நிறுத்தினாலும் அனைத்து திட்டங்களும் தொடரும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | 3வது மொழி வேண்டும்... புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்க வேண்டும் - எல். முருகன் தடாலடி!

மேலும் படிக்க | புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்...? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

மேலும் படிக்க | ரூ. 5000 கோடி நிதியை தமிழ்நாடு இழக்கிறது... தர்மேந்திர பிரதான் பேச்சால் பரபரப்பு - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News