RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு முக்கியமான செய்தி மக்களுக்கு வெளிவந்துள்ளது. ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. சந்தையில் அவ்வப்போது போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட நேரங்களில் ரிசர்வ் வங்கி, தாமதிக்காமல் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றது.
Fake Currency Notes: போலி ரூபாய் நோட்டுகள்
தற்போது போலி 200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சந்தையில் வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் போலி 200 ரூபாய் நோட்டுகளால் ஏமாற்றப்படாமல் இருக்க, அவற்றை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சிறப்பு குறிப்புகளை வழங்கியுள்ளது. இந்த குறிப்புகளின் மூலம் ஒரு நொடியில் போலி 200 ரூபாய் நோட்டை அடையாளம் காண முடியும்.
RBI: ஆர்பிஐ கூறியது என்ன?
2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, 200 மற்றும் 500 ரூபாய் போலி நோட்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அளித்து, வாங்கி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மக்களில் நிதி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
200 Rupee Notes: 200 ரூபாய் நோட்டில் இவற்றை கவனிக்க வேண்டியது அவசியம்
உண்மையான ரூ.200 நோட்டை அடையாளம் காண சில சிறப்பு அடையாளங்கள் உள்ளன.
- நோட்டின் இடது பக்கத்தில் 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
- நடுவில் மகாத்மா காந்தியின் தெளிவான படம் உள்ளது.
- 'RBI', 'Bharat', 'India', '200' ஆகியவை சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
- வலது பக்கத்தில் அசோகத் தூணின் சின்னமும் உள்ளது.
இந்த அடையாளங்களை சரிபார்த்து, உண்மையான மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை மக்கள் வேறுபடுத்தி அறியலாம்.
Reserve Bank of India: கோரிக்கை வைத்த ரிசவ் வங்கி
போலி ரூபாய் நோட்டுகள் பரவுவதைத் தடுக்க, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. பரிவர்த்தனைகளைச் செய்யும்போது ரூபாய் நோட்டுகளை முறையாகச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டால், உடனடியாக அருகிலுள்ள நிர்வாகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடமோ புகார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சரியான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுகான பரவல் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
200 ரூபாய் நோட்டு முடக்கப்படுமா?
200 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசாங்கம் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற விவாதம் மக்களிடையே சமீபத்தில் மிகவும் தீவிரமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சந்தையில் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இந்த நோட்டுகள் கிட்டத்தட்ட அனைவரிடமும் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் தினசரி பரிவர்த்தனைகளுக்கு இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
200 ரூபாய் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பதால், இந்த நோட்டுகளை அரசு முடக்கக்கூடும் என்ற பேச்சு தீவிரம் பெற்றது. எனினும், இவை அனைத்தும் வதந்திகளே என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த பிரச்சினையில் முக்கியமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது மோடி அரசு இந்த ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போது ரூ.200 நோட்டுகள் தடை செய்யப்படவில்லை. ஆனால் அதிகரித்து வரும் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.200 நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ